இறவை எள் சாகுபடிக்கு ஆலோசனைகள்

மாசிப் பட்ட இறவை எள் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கு வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 1.65 லட்சம் ஏக்கரில் இறவை மற்றும் மானாவாரி எள் சாகுபடி செய்யப்படுகிறது.  இறவை எள் சாகுபடிக்கு மாசிப் பட்டம் (ஏப்ரல்-மார்ச்) ஏற்றதாக சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

மாசிப் பட்டத்தில் இறவை எள் விதைப்புக்கு, டிஎம்வி 3, டிஎம்வி 4, டிஎம்வி 6, கோ1, விஆர்ஐ (எஸ்வி) 1 மற்றும் எஸ்விபிஆர் 1 போன்ற எள் ரகங்கள் ஏற்றவை.

ஒரு ஏக்கருக்கு தேவையான எள் விதை 2 கிலோ. 2 கிலோ எள் விதையுடன் 8 கிலோ மணல் கலந்து, நிலத்தின் மேல்பரப்பில் சீராகத் தூவவேண்டும்.

விதைப்புக்கு முன், கிலோவுக்கு 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.அல்லது கிலோவுக்கு 4 கிராம் திரம் அல்லது 2 கிராம் காபர்பன்டாசிம் 2 கிராம் கலந்து பூஞ்சாண விதை நேர்த்தி செய்யலாம்.

2 கிலோ விதையுடன் 1 பாக்கெட் (200 கிராம்) அúஸôஸ் ஃபைரில்லம் கலந்து நுண்ணுயிர் நேர்த்தி செய்யலாம்.

மேலும் ஏக்கருக்கு 4 பாக்கெட் அúஸôஸ்ஃபைரில்லம் நுண்ணுயிர் உரமத்தை, நன்கு மக்கிய தூளாக்கப்பட்ட தொழுஉரத்துடன் கலந்து வயலில் தூவவேண்டும்.

மாங்கனீஸ் பற்றாக்குறையைப் போக்க, ஏக்கருக்கு 2 கிலோ மாங்கனீஸ் சல்பேட்டை, 18 கிலோ மணலுடன் கலந்து, உழவுக்குப்பின் வயலில் தூவ வேண்டும். மண் மாதிரி ஆய்வு சிபாரிசுப்படி உரமிட வேண்டும்.

இறவை எள் சாகுபடிக்கு ஏக்கருக்கு 14:9:9 என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்து தரவல்ல யூரியா 30 கிலோ, சூப்பர் 25 கிலோ, பொட்டாஷ் 15 கிலோ ரசாயன உரமிடலாம்.

விதைப்பு செய்த உடன் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.பின்னர் 7 நாள்கள் கழித்து உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

விதைத்து 25-வது நாளிலும், பூப்பதற்கு முன் ஒரு முறையும், பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், காய் பிடிக்கும் தருணத்திலும் தேவைக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

பூக்கும் தருணத்தில் அவசியம் நீர் பாய்ச்ச வேண்டும்.

முதிர்ச்சிப் பருவத்தில் மண்ணில் ஈரப்பதம் குறைவாக இருக்க வேண்டும்.

ஈரப்பதத்துக்கு மேல் தண்ணீர் பாய்ச்சினால், முதிர்ச்சி பாதிக்கப்படும். காய் பிடிப்பு திறனும் விதை உற்பத்தியும் பாதிக்கப்படும். எனவே விதைப்பு செய்த 65 நாள்களுக்குப் பின், நீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட வேண்டும்.

விதைத்த 15-ம் நாள் செடிக்குச் செடி 15 செ.மீ. இடைவெளி விட்டு, செடிகளை களைந்துவிட வேண்டும். பின்னர் 30-ம் நாள் செடிக்குச் செடி 30 செ.மீ. இடைவெளிவிட்டு, களைந்துவிட வேண்டும். விதைத்த 15-ம் நாளில் ஒரு முறையும், 35-வது நாளில் 2-வது முறையும் களை எடுத்து, களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அருகாமையில் உள்ள வட்டார வேளாண் அலுவலர்களை நேரில் அணுகி ஆலோசனை பெறலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *