எள் பயிரில் அறுவடைக்கு பின் நேர்த்தி

எள் பயிரில் நல்ல லாபம் பெற அறுவடைக்கு பின் நேர்த்தி தொழில் நுட்பங்களை பின்பற்ற வேண்டும் என கோட்ட வேளாண்மை அலுவலர் தெரிவித்துள்ளார்.

 • ]எண்ணெய் வித்து பயிரான எள்ளில் எண்ணெய் அளவு குறையாமலும், தரம் கெடாமல் காத்திடவும், நல்ல நிலையில் விற்றிடவும் கீழ்கண்ட நேர்த்தி முறைகளை அறுவடைக்கு பின் செய்ய வேண்டும்.
 • எள் பயிர் அறுவடையின் போது செடியின் கீழ் பகுதியிலுள்ள இலைகளில் 25 சதவீதம் இலைகள் உதிர்ந்தும் மேலே உள்ள இலைகள் மற்றும் தண்டு பகுதிகள் மஞ்சள் நிறமாக மாறியிருக்க வேண்டும்.
 • எள் காய்கள் பாதி அளவு மஞ்சள் நிறம் அடைந்து விட்டால் பயிர் அறுவடை செய்ய ஏற்ற பருவமாகும்.
 • பயிரின் கீழ் பகுதியில் இருந்து 10வது காயை உடைத்துப் பார்த்தால் உள்ளே இருக்கும் விதைகள் கருப்பு நிறமாக மாறியிருந்தால் அறுவடை செய்து விடலாம்.
 • வெள்ளை எள் பயிருக்கு எள் விதை வெள்ளை நிறம் அடைய வேண்டும்.
 • மேலே கூறிய நிலையைத் தாண்டி அறுவடை செய்தால் எள் காய்கள் வெடித்து விதைகள் சிதறி சேதம் அடையும்.
 • எள் பயிரைத் தரை மட்டத்தில் அறுத்து எடுக்க வேண்டும்.
 • செடியின் மேல் பகுதியை உள்புறமும், அடிபாகம் வெளிப்புறமும் இருக்கும்படி வைத்து வட்ட வடிவமாக திறந்த வெளியில் அடுக்கி வைக்க வேண்டும்.
 • அடுக்கிய எள் செடியில் உள்ள காய்கள் ஒட்டு மொத்தமாக முதிர்ச்சி அடைய மேல் பகுதியில் வைக்கோல் போட்டு மூடி வைக்க வேண்டும்.
 • மூன்று நாட்கள் கழித்து எள் பயிரை எடுத்து களத்தில் காயப்போட வேண்டும்.
 • மூன்று முதல் ஐந்து நாட்கள் காயவைத்து பின் விதைகளை தனியே பிரித்தெடுக்க வேண்டும்

இவ்வாறு விருத்தாசலம் கோட்ட வேளாண்மை அலுவலர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *