எள் மகசூல் பெருக்கிட டிப்ஸ்

மாசிப்பட்டம் மடியில் பணம் என்பது எள் விவசாயத்திற்கான வழக்குச்சொல். ஆனால் இந்த ஆண்டில் தாளடி, பிந்திப்போனதால் பல இடங்களில் அறுவடைதற்போது தான் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தொடர்ந்து கோடையிலும் நெல் சாகுபடி செய்யலாமா?  என்று சிலர் சிந்திக்ககூடும். இது நடக்கக்கூடிய காரியமா?  மின் வெட்டு நம்மை நாளும் அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் குறைந்த நீரில் குறைந்த மகசூல், அதிக லாபமும் பெற என்ன செய்யலாம் என்பதே நம் எண்ணமாக இருக்கவேண்டும்.

அதன் அடிப்படையில் நம்முன்னே நல்ல மகசூல் தரக்கூடிய பயிராக தென்படுவது எள்ளும், உளுந்துமே.

எள் சாகுபடியில் 200 கிலோ – 300 கிலோ மகசூல் மட்டுமே பெற்றுக்கொண்டிருந்த நிலையில் விருத்தாச்சலம் ஆராய்ச்சி நிலைய வல்லுநர்களின் வழிகாட்டுதலோடு ஏக்கருக்கு ஒரு டன் வரை எடுத்த் விவசாயிகள் அன்பில் முதல் திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு ஆகிய பகுதிகளில் உள்ளனர்.  இவ்வாறு அதிக மகசூல் எடுக்க முதலில் நாம் செய்யவேண்டியது என்ன?

எள் விதைப்பதற்கு முன்னாடி வயலை உழுது மேலாக உழவு செய்யனும். பிறகு எள் விதைப்பு செய்யனும்.

அதற்கு பிறகு தான் படல் போட்டு இழுத்துவிடனும்.

ஒரு ஏக்கருக்கு 1 – 1/4 கிலோ விதை எள் தேவை.  படி அளவில் சொல்லனும்னா 1 – 1/2 படி விதை எள் தேவை.

ஒரு பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ் 20 கிராம் தேவை.

முதலில் ஒரு லிட்டர் தண்ணீரில பாஸ்போபாக்டீரியாவை கொட்டி கலக்கிவிட்டு, பிறகு எள்ளை கொட்டி குச்சியால கலக்கிவிடனும்.

அதற்கு பிறகுதான் சூடோமோனாஸை கொட்டி கலக்கனும்.  எள் தண்ணீரை எல்லாம் உறிஞ்சி கெட்டியாகிவிடும்.

அதற்கு அப்புறம் தான் எள்ளை எடுத்து சாக்குல கொட்டி உலர்த்திவிடனும். பிறகு விதைகளை எடுத்து விதைப்பு செய்யலாம்.

15 நாள் களை எடுத்துவிட்டு எள் பயிரை களைத்துவிடனும்.  ஒரு சதுர மீட்டருக்கு 10 செடி இருக்குமாறு பார்த்துக்கிட்டு களை எடுக்க லேசான ஈரமும், களை எடுத்த பிறகு எடுத்த களைகளை காயவிட்டு பிறகு தண்ணீர் விடனும்.  இவ்வாறு செய்தால் நல்ல மகசூலும், விளைச்சலும் கிடைக்கும்.

மாசிப்பட்டம் தாண்டி விட்டது என்று என்னவேண்டாம்.  நம் பகுதிகள் பங்குனியிலும் நல்ல மகசூல் பெற்றதை பார்த்திருக்கின்றோம்.  அதேபோல் சித்திரைப்பட்டம் உளுந்து சாகுபடியை பங்குனி கடைசி வாரத்தில் மேற்கொள்வதும் நன்மை பயக்கும்.

தகவல்: வ.பழனியப்பன், ஆலோசகர்

தகவல் அனுப்பியவர் : முருகன், ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  திருவையாறு

நன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

One thought on “எள் மகசூல் பெருக்கிட டிப்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *