கத்தரிக்காய் சாகுபடியில் ஹெக்டேருக்கு 70 டன் மகசூல்

கத்தரியை பயிரிட்டு நன்கு பராமரித்தால் 150-160 நாள்கள் வரை ஹெக்டேருக்கு 70 டன் வரை மகசூல் பெறலாம் என்று சிவகங்கை தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர்.

கத்தரி ரகங்கள்

  • ரவையா, அர்கா நவநீத், பூசா அன்மமால், கோ.பி.எச் 1, அஸ்பாரா, என்.எஸ்.1720, சாயா, நவ்கிரான் சப்பால், சியாமல், விஜய் ஆங்கூர் ஆகிய ரகங்கள் பயிரிட ஏற்றவையாகும்.

பயிரிடும் முறை

  • கத்தரி பயிரிட மே-ஜூன், அக்டோபர்-நவம்பர், ஜனவரி-பிப்ரவரி ஆகிய பருவங்கள் சிறந்தவை.
  • ஒரு ஹெக்டேர் அளவில் பயிரிட 100 கிராம் போதுமானது.
  • விதைகளை வரிசைக்கு வரிசை 75 செ.மீ., செடிக்கு செடி 60 செ.மீ என்ற இடைவெளியில் விதைக்க வேண்டும்.
  • பின்னர் அடியுரமாக ஹெக்டேருக்கு தொழு உரம் 25 டன், தழை, மணி, சாம்பல் சத்துகள் முறையே 100:150:100 கிலோ வீதம் இட வேண்டும்.
  • மேலுரமாக விதைத்த 30 நாள்கள் கழித்து 50 கிலோ தழைச்சத்து, பின் 60 நாள்கள் கழித்து 50 கிலோ தழைச்சத்து இட வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

  • காய் துளைப்பான் மற்றம் தண்டு துளைப்பான் பூச்சிகள் தாக்கினால் ஒரு லிட்டர் நீரில் எண்டோசல்பான் 2 மி.லி. மற்றும் 2 மி.லி. வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும்.
  • பச்சை தத்துப்பூச்சி, சாம்பல் கூன்வண்டு, வெள்ளை ஈ தாக்குதல் தெரிந்தால் இமிடாகுளோபிரிட் மருந்தை ஒரு லிட்டர் நீரில் 0.5 மி.லி., மற்றும் 2 மி.லி. வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்கலாம்.

நோய்கள்

  • சிற்றிலை நோய் : புதிதாக வரும் இலைகள் சிறுத்து செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும். இதை கட்டுப்படுத்த நோய் தாக்கப்பட்ட செடிகளை அகற்றி அழித்துவிட வேண்டும். ஒரு லிட்டர் நீரில் மீதைல்டெமட்டான் 2 மி.லி., அல்லது டைமெத்தோயேட் 2.5 மி.லி. கலந்து கை தெளி்ப்பான் மூலம் தெளித்து நோய் பரப்பும் காரணிகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • இலைப்புள்ளி நோய் : இலைகளின் மேல் வட்ட வடிவ சிறிய புள்ளிகள் காணப்படுவது இதன் அறிகுறிகளாகும். இதற்கு ஒரு லிட்டர் நீரில் மேங்கோசெப் 2 கிராம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்

நன்றி: தினமணி

கத்திரிக்காய் சாகுபடி பற்றிய மற்ற செய்திகளை இங்கே படிக்கவும்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *