மண் : நல்ல வடிகால் வசதியுள்ள, அங்ககப்பொருட்கள் நிரம்பிய மண் வகைகள் உகந்தது.
விதைப்பதற்கும் நடவிற்கும் ஏற்ற பருவம் : டிசம்பர் – ஜனவரி மற்றும் மே – ஜீன்
விதை அளவு : 400 கிராம் ஒரு எக்டருக்கு.
நாற்றாங்கால் அளவு: 100 சதுர மீட்டர் எக்டருக்கு.
விதையும் விதைப்பும்
ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது கேப்டான் அல்லது திரம் 2 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.மேலும் விதைகளை அசோஸ்பைரில்லம் கொண்டும் நேர்த்தி செய்யவேண்டும். 400 கிராம் விதைகளுக்கு 40 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் சிறிது அரிசிக் கஞ்சி சேர்த்து நேர்த்தி செய்யவும்.
இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை, உயரமான பாத்திகளில் 10 செ.மீ இடைவெளியில் அரை அங்குல ஆழத்திற்கு கோடுகள் போட்டு அதில் விதைகளைப் பரவலாகத் தூவவேண்டும். விதைத்த பின்பு மணல் போட்டு மூடி உடனே நீர் பாய்ச்சவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டசத்து மேலாண்மை
உரமிடுதல் : எக்டருக்கு
அடியுரம்: தொழு உரம் எக்டருக்கு: 25 டன்கள் இதனுடன் வேப்பம் பிண்ணாக்கு 200 கிலோ; தழை- 50kg மணி- 50kg சாம்பல் – 30kg
நடவின் போது: தொழு உரம் எக்டருக்கு: 2 கிலோ அசோஸ்பைரில்லம்
மேலுரம்: தழை: 50kg
மேற்படி உரங்களை கத்தரிச் செடியிலிருந்து 10 செ.மீ தள்ளி பட்டையாக மண்ணில் இட்டு கலந்து செடிகளுக்கு மண் அணைத்து விடவேண்டும். செடிகளுக்கு உரமிட்ட பின்பு உடனடியாக நீர் பாய்ச்சவேண்டும்.
நீர் நிர்வாகம்
நடவு செய்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். அதன் பின்னர் 7 நாட்களுக்கொருமுறை நீர் பாய்ச்சவேண்டும். மழைக்காலங்களில் வயலில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி
களை நிர்வாகம் : கத்தரி நாற்றுக்களை நடுவதற்கு முன் களைக்கொல்லி இடுதல் அவசியம். களைகள் முளைக்கும் முன் அவற்றைக் கட்டப்படுத்த புளுகுளோரலின் என்னும் களைக் கொல்லியினை 1 லிட்டர் என்ற அளவில் 500 லிட்டர் நீரில் நன்கு கலந்து ஒரே சீராகத் தெளிக்கவேண்டும். இவ்வாறு களைக்கொல்லி தெளித்தவுடன் நீர் பாய்ச்சி நாற்றுக்களை நடவேண்டும். பின்பு மேலுரமிடுவதற்கு முன்பு கொத்துக்களை எடுத்துக் களைகளை நீக்கவேண்டும்.
வளர்ச்சி ஊக்கிகள் : கத்தரியில் ட்ரைக்கோடானால் 2 பிபிஎம் மற்றும் சோடியம் போரேட் அல்லது போராக்ஸ் 35 மில்லி கிராம் இவற்றை ஒருலிட்டர் நீருடன் கலந்து நாற்று நட்ட 15 நாட்கள் கழித்து ஒரு முறையும், பிறகு பூக்கள் தோன்றும் பருவத்திலும் தெளிப்பதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம்.
மகசூல் : ஒரு எக்டருக்கு 150-160 நாட்களில் 25 முதல் 30 டன்கள்
(இரகங்கள்). வீரிய ஒட்டு இரகங்களில் 45-50 டன்கள் / எக்டர்.
இரகங்கள் : கோ.1, கோ.2, எம்டியு 1, பிகேஎம் 1, பிஎல்ஆர் 1, கேகேஎம் 1, அண்ணாமலைஈ கோபிஎச் 1 (வீரிய ஒட்டு இரகம்) அர்கா நவனீத், அர்கா கேசவ், அர்கா நிரி, அர்கா சிரீஸ் மற்றும் அர்கா ஆனந்த்.
நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
please register my e mail
done
மேலே சொல்லப்பட்ட களைக்கொல்லி எங்கு கிடைக்கும். எங்கள் பகுதியில் இல்லை. (மதுரையில்) வேறு எங்கு கிடைக்கும். 8524041429 கைபேசி எண்ணில் தகவல் வழங்கவும். நன்றி.