கத்திரியில் தண்டு துளைப்பான் தடுக்க வழிமுறை

கத்திரியில் காய் மற்றும் தண்டு துளைப்பான் நோய்களை இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து கட்டுப்படுத்துவது சரியான முறையாகும்

 • கத்திரி சாகுபடி செய்யும் பகுதியில தண்டு துளைப்பான் மிகப்பெரும் சேதத்தை உண்டாக்கும் பூச்சியாக உள்ளது.
 • புழு செடியின் நுனிக்குருத்து உள்ளே சென்று செடியின் மற்ற பாகங்களுக்கு செல்லும் தண்ணீர் கடத்தும் திசுக்களையும், காயையும் சேதப்படுத்தியும் விடுகிறது.அதனால், விவசாயிகள் மகசூல் இழப்பு பெரிய அளவில் ஏற்படுகிறது.
 • அதைக் கட்டுப்படுத்த விவசாயிகள் அதிகமான அளவில் ஊடுருவிப் பாயும் பயிர் பாதுகாப்பு மருந்துகளை தெளித்து வருகின்றனர்.
 • அதனால் கத்திரிக்காய்களில் எஞ்சிய நஞ்சு மனிதர்களுக்கு தீங்கை ஏற்படுத்துகிறது.மண் வளம் கெடுவதுடன்,  சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.
 • கத்திரியில் காய் மற்றும் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த உயிரிய பயிர் பாதுகாப்பு சாதனமாக இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து பயிரை பாதுகாக்க வேண்டும்.
 • கத்திரி நாற்று நடவு செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் ஏக்கருக்கு 12 முதல் 16 இனக்கவர்ச்சி பொறிகள் வைக்க வேண்டும்.
 • ஆண் அந்துப்பூச்சிகளை கவர்வதற்காக ஒரு குப்பியில் பெண் அந்துப்பூச்சியின் வாசனையுள்ள திரவம் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும்.
 • பொறியினுள் இறந்து கிடக்கும் ஆண் அந்துப்பூச்சிகளை வாரம் ஒரு முறை தண்ணீருடன் கீழே கொட்டி புதிய எண்ணெய் கலந்த தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும்.
 • இரண்டு மாதத்துக்கு ஒரு முறை திரவம் நிரப்பிய குப்பியை புதியதாக விலைக்கு வாங்கி வைக்க வேண்டும். ஒரு குப்பியின் விலை 15 ரூபாய்.
 • மருந்து தெளிக்காமல் இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து கத்திரியில் காய் மற்றும் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தி குறைந்த வரும் கத்திரி சாகுபடியை அதிகரிக்க வேண்டும்.
 • கத்திரியை தாக்கும் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தும் வகையில், ஆத்மா திட்டத்தின் கீழ், மோகனூர் யூனியன் மூங்கில்பட்டியை சேர்ந்த விவசாயி கணேசன் என்பவர் தோட்டத்தில் இனக்கவர்ச்சி பொறி செயல் விளக்கத்திடல் அமைத்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

மோகனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவன விற்பனை மேலாளர் பாஸ்கர், இனக்கவர்ச்சி பொறிகள் வைக்கும் முறை பற்றியும், அதனால் விவசாயிகளுக்கு கிடைக்கும்  பயன்கள் குறித்தும் விளக்கினார்.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “கத்திரியில் தண்டு துளைப்பான் தடுக்க வழிமுறை

 1. பாஷ்யம் மாமல்லன் says:

  மிகவும் பயனுள்ள தகவல்கள்.
  மிக்க நன்றி.
  மாமல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *