“கரும்பில் குருத்தழுகல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த, தடுப்பு முறைகளை கையாள வேண்டும்’ என, நாமக்கல் உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
- கரும்புப் பயிரை, 20 வகையான நோய்கள் தாக்கி விளைச்சளுக்கும், சர்க்கரைச் சத்துக்கும் சேதம் விளைவிக்கின்றது. அதில், முக்கியமான நோய் குருத்தழுகல் நோய்.
- இது, மூன்று முதல் ஏழு மாத கரும்பில், அதிக அளவில் தோன்றுகிறது.
நோயின் அறிகுறிகள்
- மஞ்சள் தேமல் நிலை, நுனி அழுகல் நிலை, கத்தி வெட்டு நிலை என மூன்று நிலைகளில் தோன்றுகிறது.
- இளம்பயிரில் குருத்து இலைகள் ஒன்றோடொன்று பிணைந்து, புதுக்குருத்து வெளிவராமல் தடுத்துவிடும்.
- இந்நோயின் பூசண விதைகள் காற்றினால் பரவுகின்றன.
- மே மாதம் நடப்படும் கரும்புகளில், இந்நோய் அதிக அளவில் தோன்றுகிறது.
கட்டுபடுத்தும் முறைகள்
- இந்நோய் தோன்றும் போது, மென்மோசெப் ஒரு லிட்டர் நீரில் மூன்று கிராம் அல்லது கார்பெண்டாசிம் ஒரு லிட்டர் நீரில் ஒரு கிராம் அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைடு ஒரு லிட்டர் நீரில் இரண்டு கிராம் என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
- நோயின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மூன்று முறை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
- நோய் முற்றிய நிலையில் தாக்கப்பட்ட பயிர்களைப் பிடுங்கி எறிய வேண்டும்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்