கரும்பு பயிருக்கு தழைச்சத்து கிடைக்க வேண்டி, தக்கைப் பூண்டு விதைப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பெண்ணாடம் அடுத்த வடகரை, நந்திமங்கலம், கோனூர், தாழநல்லூர், முருகன்குடி, துறையூர், அரியராவி, பெ.பூவனூர் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கரும்பு பயிரிடப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் மாதம் பயிரிட்ட கரும்புகளுக்கு இடையே தக்கைப்பூண்டு விதைப்பு செய்தனர்.
அவை, செழிப்பாக வளர்ந்துள்ள நிலையில், அதனை பிடுங்கி கரும்புகளின் அடிப்பகுதியில் வைத்து, மண் அணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அரியராவி விவசாயி ரங்கநாதன் கூறுகையில், “கடந்த மார்ச் மாதம் நாலரை ஏக்கரில் கரும்பு பயிரிட்டேன். நான்கு மாதங்களான நிலையில், கரும்புகள் செழிப்பாக வளர்ந்துள்ளன. தழைச்சத்து கிடைக்க வேண்டி, கடந்த மாதம் கரும்புகளுக்கு இடையே தக்கைப்பூண்டு விதைத்தேன்.
தற்போது செழிப்பாக வளர்ந்துள்ள தக்கைப்பூண்டு செடிகளை இம்மாத இறுதியில் பிடுங்கி, கரும்புகளுக்கு அடிப்பகுதியில் வைத்து மண் அணைக்க உள்ளேன்.
இதனால் கரும்புகள் நன்கு வளர்ச்சியடையும்’ என்றார்.
தோட்டக்கலை உதவி இயக்குனர் மணிமொழி கூறுகையில், “தழைச் சத்து வேண்டி தக்கைப் பூண்டு விதைப்பது விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது.
- தக்கைப்பூண்டு எல்லா பயிர்களுக்குமே ஏற்றது.
- அவை, காய்கள் காய்க்கும் முன், இலைதழையுடன் இருக்கும்போதே உழுதுவிட வேண்டும்.
- தக்கைப்பூண்டு மக்கி பயிர்களுக்கு தழைச்சத்து கிடைக்கும்.இதனால் பயிர்களில் மகசூல் அதிரிக்கும்.
- முன்னர் தொழுஉரம் பயன்படுத்தப்பட்டு வந்தது.தற்போது, தொழுஉரம் பயன்பாடு குறைந்ததால் தக்கைப்பூண்டு, சணப்பை விதைப்பது அதிகரித்து வருகிறது’ என்றார்.
நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்