கரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறை

கரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறையை போக்குவதற்கான வழிமுறைகள் பற்றி திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் நா.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அறிகுறிகள்:

 • இளம் பயிர்களில் புதிதாகத் தோன்றும் இலைகள் பற்றாக்குறை அறிகுறிகளைக் காட்டும் நரம்புப் பகுதிகள் கோடுபோல் இளம் பச்சை நிறத்திலும் நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதிகள் நீண்ட பட்டைகளாக இலையின் அடி முதல் நுனி வரை பொன்நிற மஞ்சளாகத் தெரியும்.
 • பற்றாக்குறை அதிகமானால் இலைகள் வெளிர் மஞ்சள் நிறமாகிவிடும்
 • .பச்சையம் குறைந்து ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படுவதால் பயிர் வளர்ச்சிக் குன்றிவிடும்.

ஏற்படுவதற்கான காரணம்?

 • கரும்பு அறுவடைக்குப் பிறகு விவசாயிகள் தோகையை எரித்து விடுவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் மண்புழுக்களின் எண்ணிக்கை குறைவதோடு இரும்புச்சத்தில் கிடைக்கும் அளவும் குறைந்துவிடுகிறது.
 • சுண்ணாம்பு அதிகம் உள்ள மண்ணில் மழைக்காலங்களில் இரும்புச்சத்தின் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் சுண்ணாம்பு தூண்டுதலால் ஏற்படக்கூடிய இரும்புச்சத்து பற்றாக்குறை என்பர்.

எப்பொழுது ஏற்படும்?

 • மறுதாம்பு கரும்புப் பயிரில் இரும்புச்சத்துப் பற்றாக்குறை அதிகமாக பாதிக்கிறது.
 • இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்கள் மண்ணின் அங்கத்தன்மை, ஈரப்பதம் குறைவதும் மற்றும் சுண்ணாம்புசத்து அதிகரிப்பதால் இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.இதனால் மகசூல் குறைந்துவிடும்.

பாதிப்பு

 • தண்டு மற்றும் வேர் வளர்ச்சி பாதிக்கப்படும், இளம் இலைகள் வெளுத்துக் காணப்படும், பயிரின் குருத்துகாகிதம் போன்று வெளுத்துக் காணப்படும்
 • முதிர்ந்த இலைகள் மட்டும் பச்சை நிறத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும், இலைகள் ஆங்காங்கே கருகிக்காணப்படும்
 • ஒளிச்சேர்க்கை அளவு குறைவதோடு மகசூல் இழப்பும் ஏற்படுகிறது.

 நிவர்த்தி

 • அடியுரமாக ஒரு ஹெக்டேருக்கு 100 கிலோ பெரஸ் சல்பேட்டை இலைகளில் நன்றாகப் படியும்படித் தெளிக்க வேண்டும்.இவ்வாறு தெளிப்பதனால் இரும்புச்சத்து பற்றாக்குறையை கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு  பேராசிரியர் மற்றும் தலைவர் நா.ராமமூர்த்தி, உதவிப்பேராசிரியர் சீனி.அன்புமணி, மற்றும் முதுநிலை ஆராய்ச்சியாளர் க.முத்துலட்சுமி தெரிவித்தனர்.

 

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *