தமிழகம் கரும்பில் அதிக மகசூலுக்கு சொட்டுநீர்ப் பாசன முறை

கரும்புப் பயிருக்கு சொட்டுநீர் பாசனம் கடலூர் மாவட்டத்தில் பிரபலம் அடைந்து வருகிறது.

  • பாரம்பரிய விவசாயத்தில் ஏக்கருக்கு சராசரியாக 40 டன் மகசூல் கிடைக்கிறது. கரும்புப் பயிருக்கு சொட்டு நீர்ப்பாசனம் மேற்கொள்வதால் ஏக்கருக்கு கரும்பு மகசூல் 100 டன் வரை கிடைக்கும் என்கிறார்கள் வேளாண் அலுவலர்கள்.
  • தண்ணீர் தேவையும் உரத் தேவையும் குறைகிறது.
  • உரம் தண்ணீரில் கரைத்து அளிக்கப்படுகிறது.
  • கரும்புக்கு சொட்டு நீர்ப்பாசனம் மேற்கொள்ள அரசு 65 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது.
  • டான்ஹோடா என்ற அமைப்பின் மூலமாகவும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மூலமாகவும் இந்த மானியம் வழங்கப்படுகிறது.
  • மானியத் தொகையில் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரத்துக்கு கரைசல் உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் வழங்கப்படுகின்றன. மீதம் உள்ள தொகை சொட்டுநீர்ப் பாசனத்துக்கான கருவிகளுக்காக வழங்கப்படுகிறது.
  • இந்த மானியம் தனிநபர் விவசாயிகளுக்கு வழங்கப்படுவது இல்லை. துல்லியப் பண்ணை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் 20 அல்லது 25 பேரை ஒருங்கிணைத்து குழு ஒன்று பதிவு செய்யப்படுகிறது. இக்குழு மூலம் அதில் உறுப்பினர்களாக உள்ள கரும்பு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
  • துல்லியப் பண்ணை விவசாய திட்டத்தில் சொட்டுநீர்ப் பாசனம் மேற்கொள்வதால் பாசன நீர் சிக்கனமாகப் பயன்படுத்தப்படுகிறது. நீரில் கரையும் உரங்களை இடுவதால் நிறைந்த மகசூலுக்கு வழிவகுக்கிறது

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *