நஞ்சில்லா நாட்டு சர்க்கரை: இனிக்கும் இயற்கை விவசாயம்

புதுச்சேரியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 18 ஆயி ரம் பேர் கரும்பு விவசாயிகள். தனியார் ஆலை மூடல், நஷ்டத்தால் இயங்காத கூட்டுறவு ஆலைகள் போன்ற காரணங்க ளால் புதுச்சேரி கரும்புகள் மொத்தமும் தமிழக ஆலைகளுக்குச் செல்கின்றன.

ஆனால், புதுச்சேரி புராணசிங்குபாளையத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், கரும்பை இயற்கை முறை யில் விளைவித்து, அதை நாட்டு சர்க்கரையாக உற்பத்தி செய்கிறார். புதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு இயற்கை நாட்டு சர்க்கரை உற்பத்தி கூடம் இவருடையதுதான்.

ரவிச்சந்திரன் நம்மிடம் கூறும் போது “எங்கள் குடும்பம் முதலில் உரம், பூச்சிக்கொல்லி மருந்தை தான் பயன்படுத்தி விவசாயம் செய்தது. ஒரு கட்டத்தில் மகசூல் குறைந்தது. 2000-ம் ஆண்டு முதல் இயற்கை விவசாயத்துக்கு மாறினோம். ரசாயன கலப்பு இல்லாமல் கரும்பு உற்பத்தி செய்யத் தொடங்கினோம். மகசூல் கூடியது. கரும்பு அறுவடைக்குப் பின்னர் ரசாயன கலப்பு இல்லாத நஞ்சில்லா நாட்டு சர்க்கரையை உற்பத்தி செய்யத் தொடங்கினோம். இதற்காக உற்பத்திக் கூடம் அமைத்து சுத்தமான முறையில் சர்க்கரை உற்பத்தியானது. இதன் சுவை பிடித்துப்போக ஆரோக்கியமான சர்க்கரைக்கு மக்களின் ஆதரவளிக்கின்றனர்” என்கிறார் உற்சாகத்துடன்.

இயற்கை விவசாயத்தில் விளைந்த கரும்பு

புதுச்சேரி மட்டுமில்லாமல் சென்னை, பெங்களூர், திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இந்த இயற்கை சர்க்கரைக்கு வரவேற்பு கிடைத்தது.

வெல்லப்பாகு தயார் ஆகிறது

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வெல்ல பாகு கட்டியானவுடன் உதிர வைக்க படும் நாட்டு சர்க்கரை

 

 

 

 

இந்த வெற்றியின் ரகசியம் அறிய விவசாயிகள் பலர் ரவிசந்திரனை தேடி வருகின்றனர். தான் பெற்ற அனுபவத்தை அவர்களுக் கும் கூறுகிறார். மேலும் அவர்களுக்கு முறையான பயிற்சியும் அளிக்கிறார்.

இதன்மூலம் அனைவரும் இயற்கை விவசாயத்துக்கு திரும்ப வேண்டும். மண்ணும் உண வும் நஞ்சாவதை தடுக்க வேண்டும் என்பதுதான் இவரின் விருப்பம்.

இயற்கைக்கு இருக்கும் மவுசு எப்போதும் குறையாது என்பதை தன் உழைப்பால் உணர்த்தி இருக்கிறார் விவசாயி ரவிச்சந்திரன்.

நன்றி:ஹிந்து

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “நஞ்சில்லா நாட்டு சர்க்கரை: இனிக்கும் இயற்கை விவசாயம்

 1. மணி says:

  தேங்காய் பட்டையினை விரைவாக மக்கச்செய்வதன்கான வழிமுறைகள் உண்டா. என்ன செய்ய வேண்டும்.

  • gttaagri says:

   தேங்காய் மட்டை இலைகளை மண்புழு உரம் தயாரிக்கும் தொழிற்நுட்பம் பற்றி இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளலாம்..

   https://www.youtube.com/watch?v=AHFwmt4j6h8

 2. நாராயணன் says:

  வணக்கம் உங்கள் தொலைபேசி எண்ணை வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *