அதிக மருத்துவக் குணங்கள் கொண்ட கறிவேப்பிலை அதிக லாபமும் தரும்!
- கறிவேப்பிலை சாகுபடியில் ஒரே ஆண்டில் ஆறு முறை அறுவடை செய்து விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட முடியும்.
- தென்னிந்திய சமையலில் அதிகளவில் இடம் பெறுவது கறிவேப்பிலை. கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு கொத்து 50 காசுக்கு விற்கப்பட்டு வந்த கறிவேப்பிலை தற்போது 2 ரூபாய் வரை விற்கப்படும் அளவிற்கு மவுசு கூடியுள்ளது.
கறிவேப்பிலை வகைகள்
- செங்காம்பு, தார்வாட் 1, தார்வாட் 2 ஆகிய ரக கறிவேப்பிலை தற்போது சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மண் வகை:
- மணல் கலந்த செம்மண். வண்டல் மண் மற்றும் நல்ல வடிகால் வசதியுள்ள மண்.
நடவு முறை:
- பெரிய செடிகளாக வளர்க்க 2.5 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
- குத்துச் செடிகளாக வளர்க்க 1.2 மீ இடைவெளி வேண்டும்.
- அதிக மகசூல் பெற 60 செ.மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்
- இம்முறையில் நடவு செய்தால் 45 முதல் 60 நாள்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய முடியும்.
- பூமியில் இருந்து 10 செ.மீ. உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும்.
உரமிடுதல்:
- அடிவுரம் 1 அடி ஆழத்தில் சதுர குழித் தோண்டி நாற்றுகளைச் சுற்றி மக்கிய தொழுவுரம் இடவேண்டும்.
- பின்னர் உரத்தை மண்ணுடன் சேர்த்து கிளறி விட வேண்டும்.
- நட்டவுடன் ஒரு முறையும், மூன்றாம் நாள் ஒரு முறையும், பின்னர் வாரம் ஒருமுறையும் நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
- மேலுரம்: ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னரும் ஒரு செடிக்கு 20 கிலோ தொழுவுரத்தை இட்டு கொத்தி விடவேண்டும்.
பயிர் பாதுகாப்பு:
- கறிவேப்பிலையைத் தாக்கும் நோய் இலைப்புள்ளி நோயாகும். இதில் இருந்து பாதுகாக்க கார்பன்டைசிம் என்ற பூச்சிக்கொல்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் அளவு கலந்து செடிகள் முழுவதும் நனையும் வரை தெளிக்க வேண்டும்.
அறுவடை மற்றும் மகசூல்:
- நடவு செய்யும் முறையைப் பொறுத்து மகசூல் மாறுபடும்.
- 60 செ.மீ. இடைவெளியில் நடவு செய்தால் முதலில் 6 முதல் 9 மாதத்தில் முதல் அறுவடை செய்யலாம்.தொடர்ந்து 45 முதல் 60 நாள்களில் அறுவடை செய்யலாம்.
- ஒரு ஏக்கருக்கு 2000 கிலோ வரை அறுவடை செய்ய முடியும்.
- தற்போது கறிவேப்பிலை ஒரு கிலோ ரூ.30 முதல் 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இன்னும் விசேஷ நாள்களில் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.மருத்துவக் குணங்களுக்காக சாகுபடி செய்யும் கறிவேப்பிலை ரகங்களுக்கு தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர் பாபு அவர்களை 09444227095 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவசாயிகள் பயனடையலாம்
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
2 thoughts on “அதிக லாபம் தரும் கறிவேப்பிலை!”