உலகில் மரங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது

உலகில் தற்போது 3.04 ட்ரில்லியன் மரங்களே உள்ளன. மரத்தின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது என்று வன மரங்கள் அடர்த்தி வரைபடம் தெரிவிக்கிறது.

மேலும் நபர்கள், மரங்கள் விகிதாசரமும், 422 மனிதர்களுக்கு ஒரு மரம் என்ற அளவில் உள்ளதாக இந்தக் கணிப்புகள் கூறுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் வெட்டப்படும் மரத்தின் எண்ணிக்கை 1,500 கோடிக்கும் அதிகமாகியுள்ளது. மேலும் ஆண்டொன்றுக்கு 192,000 சதுர கீமீ பரப்பளவுக்கு காடுகள் அழிக்கப்படுகின்றன. காடுகள் அதிவேகமாக அழிக்கப்பட்டு வருவதால் மானுட நாகரீகம் தொடங்கும்போது இருந்த மரங்கள் எண்ணிககை தற்போது பாதியாக குறைந்துள்ளது. இத்தகவல்கள் நேச்சர் Nature என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது. அழிப்பு வேகம் கடந்த நூறு ஆண்டுகளில் மிக அதிகம் அதிகரித்து உள்ளது

Courtesy: Hindu
Courtesy: Hindu

தற்போது இருக்கும் 3.04 ட்ரில்லியன் மரங்களில் வெப்ப மண்டல மற்றும் துணைவெப்ப மண்டலக் காடுகளில் 1.39 ட்ரில்லியன் மரங்கள் உள்ளன. வடமுனைப் பகுதிகளில் 0.74 ட்ரில்லியன் மரங்கள் உள்ளன. மிதவெப்பப் பகுதிகளில் 0.61 ட்ரில்லியன் மரங்கள் உள்ளன. பல இடங்களில் அடர்ந்த காடுகள் பல விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதும் மரங்கள் காணாமல் போனதற்கு காரணமாகியுள்ளன.

இன்றைய தேதி வரை உலக வனப்பகுதிகளை அளவிட விஞ்ஞானிகள் செயற்கைக்கோள் படங்களையே நம்பியிருக்கின்றனர். இதனால் மரங்கள் எண்ணிக்கையை சரியாக அளவிட முடியவில்லை. எனவே மரங்களின் எண்ணிக்கையைக் கண்டறியும் அசுர முயற்சியாக அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தின் டி.டபிள்யூ. குரோதர் என்பவர் சுமார் 4 லட்சத்து 30,000 பூமி சார் அளவு முறைகளை பயன்படுத்தி அண்டார்டிகா நீங்கலாக அனைத்து கண்டங்களின் மரங்களைக் கணக்கிடும் உலக வரைபடத்தை உருவாக்கினார்.

மழை காடுகள் Couresy: Nature.com
மழை காடுகள் Couresy: Nature.com

“மரங்களின் அடர்த்தி மற்றும் மனிதர்களின் நிலப்பயன்பாடு (Land use) ஆகியவற்றுக்கான உறவுகள் எதிர்மறையாக உள்ளது. இடத்துக்காக காடுகளை மனிதர்கள் எந்த அளவுக்கு அழித்து வருகின்றனர் என்பதை இது வெளிப்படுத்துகிறது.  காடுகளை நிலமாக்கும் மனித செயல்பாடுகள் உலக அளவில் இயற்கைசூழலை அழித்து வருகின்றன” என்று இந்த ஆய்வு கூறுகிறது.
கடந்த நூறு ஆண்டுகளில்   மக்கள்  தொகை மிக வேகமாக அதிகரித்தும், அவர்களின் தேவைகள் அதிகரித்ததும் இதற்கு முக்கிய காரணங்கள். பணக்கார நாடுகளின் செயல்களால் ஒரு பக்கம் எப்படி காடுகள் அழிக்க படுகின்றன ஏழை நாடுகளில் எப்படி அழிக்க படுகின்றன என்பதை இன்னொரு நாளில்  பார்ப்போம். ஆனால் ஆனால் ஒன்று – இதே மாதிரி (Business As Usual) இன்னொரு 50 ஆண்டுகள் சென்றால் நம் பேர குழந்தைகள் வேறு விதமான உலகில் வாழ வேண்டி இருக்கும் !

நன்றி:ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *