அதிக வருவாய் தரும் பீர்க்கை சாகுபடி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 9,500 ஹெக்டேர் பரப்பளவில் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. குறைந்த முதலீட்டில், நீரில் அதிக வருவாய் தரும் பீர்க்கை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடலாம்.

வகைகள்: கோ-1, கோ-2, அர்கா ப்ரோசன் மற்றும் தனியார் வீரிய ஒட்டுகள் உள்ளன.


மண் வளம்:

நல்ல வடிகால் வசதி கொண்ட மணல் கலந்த களிமண், நடுநிலையான கார அமிலத் தன்மை கொண்ட வரை மண் பீர்க்கை பயிர் சாகுபடிக்கு ஏற்றது.

பருவம் மற்றும் விதை அளவு:

ஜூலை மற்றும் ஜனவரி மாதம் ஏற்ற சாகுபடி பருவம் ஆகும். ஹெக்டேருக்கு 1.5 கிலோ கிராம் விதைகளைப் பயன்படுத்தலாம்.

விதை நேர்த்தி:

சூடோ மோனஸ் 10 கிராம் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் விதைக்கு விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதன்மூலம் மண் மூலம் ஏற்படும் அனைத்து நோய்களையும் எளிதில் கட்டுப்படுத்தலாம்.
நிலத்தைத் தயார் படுத்துதல் மற்றும் விதைப்பு: நிலத்தை நன்கு உழுது 30 செ.மீ. – 30 செ.மீ.- 30.செ.மீ. அளவு 2.5-2 மீ இடைவெளி விட்டு குழிகள் எடுத்து குழிக்கு 5 என்ற அளவில் விதைத்து, பின் 2 செடிகள் என்ற அளவில் வைக்க வேண்டும்.

ஒவ்வொரு குழிக்கும் 100 கிராம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து அளிக்க வேண்டும். மேலும், நுண்ணுயிர் உரங்களை ஹெக்டேருக்கு இரண்டு கிலோ கிராம் மற்றும் வேப்பம் பிண்ணாக்கு 10 கிராம் இட வேண்டும்.
களை நிர்வாகம்: மண்வெட்டி உதவியுடன் களைகளை அகற்ற வேண்டும். மேலும், வளர்ச்சி ஊக்கியான எத்தரால் 250 பி.பி.எம். வரை இடைவெளியில் நான்கு முறை அளிக்க வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு:

பல்வேறு பட்டாம் பூச்சிகளால் நோய் தாக்கினாலும், பின் வரும் பூச்சிகளின் தாக்குதல் மிக முக்கியமானதாகும்.

வண்டுகள், புழுக்கள், பழ ஈக்கள்: இவற்றை கட்டுப்படுத்த டைக்ளோர்வோஸ் 76% ஈ.சி.6.5 மி.லி. அல்லது டிரைகுளோரோபன் 50% ஈ.சி.1.0 மி.லி. தெளிக்கவும். தாமிரம் மற்றும் கந்தகத் தூள் ஆகியவை தாவர நச்சுத் தன்மை கொண்டவை.

நோய்கள்:

சாம்பல் நோய்: 1 லிட்டர் தண்ணீரில் டைனோகேப் 1 மி.லி அல்லது கார்பன்டாசிம் 0.5 கிராம் கலந்து தெளிப்பதன் மூலம் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

அடிச் சாம்பல் நோய்: 1 லிட்டர் தண்ணீரில் மேன்கோசெப் அல்லது குளோரோதாலோனில் 2 கிராம் கலந்து 10 நாள் இடைவெளியில் 2 நாள்கள் தெளிக்க வேண்டும்.

மகசூல்:

ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 14 முதல் 15 டன் வரையில் மகசூல் ஈட்டலாம்.

மேலும் விவரங்களுக்கு, கிருஷ்ணகிரியை அடுத்துள்ள எலுமிச்சங்கிரி கிராமத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் தோ.சுந்தராஜை அஞ்சல் மூலமோ அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *