இயற்கை முறையில் பாகற்காய் சாகுபடி செய்யும் கிராமம்

ராமநாதபுரம் அருகே நைனாமரைக்கான் கிராமத்தில் விவசாயிகள் அனைவரும் இயற்கை முறையில் நாட்டு ரக பாகற்காய் சாகுபடி செய் கின்றனர்.இப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாகற்காய் சாகுபடி செய்கின்றனர்.

அப்பகுதியை சேர்ந்த நாட்டு ரகங்களையே பயிடுகின்றனர். இவற்றிற்கு கொலுஞ்சி, கால்நடை சாணம் மட்டுமே உரமாக இடப்படுகிறது. சிலர் மண்புழு உரத்தை பயன்படுத்துகின்றனர். ரசயன உரத்தை பயன்படுத்துவதில்லை.

இங்கு விளையும் காய்கள் அளவில் பெரிதாக இருக்கும்.பாரம்பரியமாகவும், இயற்கை முறையிலும் நைனாமரைக்கான் பாகற்காய் விளைவதால், ராமநாதபுரம் பகுதி மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

 

 

 

 

 

 

 

 

விவசாயி ஆனந்தன் கூறுகையில், “25 சென்ட்டில் பாகற்காய் சாகுபடி செய்துள்ளேன். மூன்று மாதங்களில் காய்களை பறிக்கலாம். 1,200 கிலோ வரை கிடைக்கும். ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். அடுத்த சாகுபடிக்கு தேவையான விதைகளை, பாகற்காய்களை பழுக்க வைத்து எடுத்து கொள்ளோம்,” என்றார்.

நன்றி:தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *