காய்கறிப் பயிர்களில் மோனோகுரோட்டோபாஸ் தடை

மோனோக்ரோடோபோஸ் (Monocrotophos) என்ற ரசாயன பூச்சி கொல்லி பல நாடுகளில் தடை செய்ய பட்ட ஒரு ரசாயனம். இந்த ரசாயனத்தால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மூளையை பாதிக்கும் என்று படித்தோம். இந்த ரசாயன பூச்சி கொல்லி பற்றி நன்று தெரிந்து இருந்தாலும் இதை பயன் படுத்துவது குறைய வில்லை.

Monocrotophos-36-SL

இப்போது கேரளா மாநிலத்தில் காய்கறிகளில் ரசாயனம் பற்றிய விழிப்புணர்வு அதிகம் ஆன பின்பு அவர்கள் தமிழகத்தில் இருந்து வரும் காய்கறிகளை சந்தேகத்தோடு பார்க்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மோனோக்ரோடோபோஸ் காய்கறிகளுக்கு தடை செய்திருப்பது நல்ல செய்தி. மற்ற மாவட்டங்களிலும் இது தடை செய்ய படுமா? தினமணியில் இருந்து செய்தி…

காய்கறிப் பயிர்களில் மோனோ குரோட்டோபாஸ், மீத்தைல் பாரத்தியான் மருந்து பயன்படுத்த தடை

திருநெல்வேலி மாவட்டத்தில் காய்கறிப் பயிர்களுக்கு மோனோ குரோட்டோபாஸ், மீத்தைல் பாரத்தியான் ஆகிய மருந்துகளைப் பயன்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் செ. சந்திரசேகரன் கூறியது:

தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துகளை சந்தையில் விற்பனை செய்வதோ, இருப்பு வைத்திருப்பதோ தண்டனைக்குரிய குற்றமாகும். சிலவகை பூச்சிகொல்லி மருந்துகளை காய்கறிப் பயிர்களுக்கு மட்டும் பயன்படுத்தக் கூடாது என தடை உத்தரவு உள்ளது.

ஆனால், இதே மருந்துகளை வேறு பயிர்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கும். இதன்படி, காய்கறிப் பயிர்களுக்கு மோனோகுரோட்டோபாஸ், மீத்தைல் பாரத்தியான் ஆகிய இரு பூச்சிகொல்லி மருந்துகளைப் பயன்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்துகளை காய்கறிப் பயிர்களுக்கு பயன்படுத்துவதால் அவை நச்சுத் தன்மை அடைந்துவிடுகின்றன. நச்சுத் தன்மையுள்ள காய்கறிகளை அன்றாட உணவில் பயன்படுத்தினால் உடல் நலத்துக்கும் கேடு. எனவே, விவசாயிகள் இந்த மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம்.

மேலும், காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இந்த பூச்சிகொல்லி மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது. இந்தப் பூச்சிகொல்லி மருந்துகளை இதர பயிர்களுக்கு விற்பனை செய்யும்போது காய்கறிப் பயிர்களுக்கு பயன்படுத்தக் கூடாது எனப் பட்டியலில் குறிப்பிட்டிருக்க வேண்டும். இந்த எச்சரிக்கை அறிவிப்பு, பட்டியலில் இல்லாமல் விற்பனை செய்வது குற்றமாகக் கருதப்படும். விவசாயிகளும் இந்த பூச்சிகொல்லி மருந்துகளை காய்கறிகளுக்கு பயன்படுத்தக் கூடாது. மேலும், மருந்துகளில் எச்சரிக்கைப் பட்டியல் இல்லாதவற்றை விவசாயிகள் வாங்கக் கூடாது எனவும் எச்சரித்துள்ளார் அவர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *