தமிழ்நாட்டில் அதிகம் காய்கறிகள் சாகுபடி செய்ய படும் இடம் உடுமலைப்பேட்டை
இந்த மாவட்டம் இப்போது மெதுவாக மழை நீர் குறைந்த மாவட்டம் ஆக மாறி வருகிறது
ஆனால் இந்த ஊரில் இப்பவும் அதிகம் காய்கறிகள் சாகுபடி செய்ய படுகின்றன? எப்படி நீர் குறைவான இடத்தில இது சாத்தியம்?
கோகோ பீட் என்பது தேங்காய் நாரில் இருந்து தயாரிக்கப்படும் மண் போன்ற பொருள். இதை பிளாஸ்டிக் பையில் நிரப்பி காய்கறிகளை சாகுபடி செய்கின்றனர்.
கோகோ பீட் பற்றி கூறுகிறார் கிறீன் டெர்ரா எனப்படும் நிறுவனத்தின் நிறுவனர் ரகுநந்தன்:
“மேலை நாடுகளிலும் மேற்கு ஆசியாவிலும் இப்படி கோகோ பீட் மூலம் காய்கறி சாகுபடி அதிகம் பாப்புலர்.
பல இடங்களில் கிறீன் ஹவுஸ் உள்ளே இவை சாகுபடி செய்ய படுகின்றன. முதல் முறையாக வெளியில் இவை சாகுபடி செய்துள்ளார் இவர், 10 சென்டில் காய்கறி வளர்த்துள்ளார்.
மிளகாய், தக்காளி போன்றவை நன்றாகவே வளர்ந்துள்ளன. 480 கிலோ காய்கறிக்கு நங்கள் ஒரு வாரத்திற்கு 10 நிமிடம் தான் நீர் பாய்ச்சுகிறோம்.
இன்னொரு மிக பெரிய நன்மை என்ன என்றால் கோகோ பீட்டில் களை செடிகள் வளர்வதில்லை. இதனால் நிறைய வேலை மிச்சம் ஆகிறது. பூச்சி தாக்குதலும் குறைவு
இந்த முறையால் நீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் காய்கறி சாகுபடி நிச்சயம் நல்ல லாபத்துடன் செய்ய முடியும் என்கிறார் இவர்
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்