கோடையில் அதிக மகசூல் தரும் 2 வகை காய்கறிகள்

கத்தரி, வெண்டை ஆகிய காய்கறிகளை கோடையில் பயிர் செய்தால், அதிக மகசூல் கிடைக்கும் என வேளாண் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, திருவூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவர் தேவநாதன், பேராசிரியர் முத்துராமலிங்கம் ஆகியோர் கூறியதாவது:

 • ஒவ்வொரு பருவ காலத்திற்கேற்ற பயிர்களை பயிர் செய்தால், அதிக மகசூலை பெறலாம். தற்போது, கோடைக்காலம் துவங்கியுள்ளது.
 • இக்காலத்தில் பயிர் செய்ய வெண்டையும், கத்தரியும் உகந்த காய்கறிகள்

வீரிய ஒட்டு ரகங்கள்

 • கத்தரியில் அர்கா நவ்ஜீத், அப்சரா, சாயா, சியாமல் என ஆறு ரகங்கள் உள்ளன.
 • வெண்டையில் சக்தி, சோனாஸ், யு.எஸ்., 7109 ஆகிய இரு ரகங்கள் உள்ளன.
 • கத்தரி பயிர் செய்ய மே – ஜூன், அக்டோபர் – டிசம்பர், ஜனவரி – மே ஆகிய மாதங்களும், வெண்டை பயிர் செய்ய பிப்ரவரி – ஏப்ரல், ஜூன் – ஆகஸ்ட் ஆகியவை உகந்த மாதங்களாகும்.

விதையளவு

 • வெண்டை ஒரு ஹெக்டேருக்கு, 1.8 கிலோவும், கத்தரி ஒரு ஹெக்டேருக்கு, 200 கிராமும் பயன்படுத்த வேண்டும்.கத்தரிக்கு டி.விரிடி, 4 கிராம், சூடோமோனாஸ் 10 கிராம், அசோஸ்பைரில்லம், 100 கிராம், பாஸ்போ பாக்டீரியா, 100 கிராம் ஆகியவையும், வெண்டைக்கு டி.விரிடி, 4 கிராம், அசோஸ்பைரில்லம், 400 கிராம் ஆகிய அளவுள்ள உரங்களை கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
 • தினமும் ஒருமணி நேரம் அல்லது தேவைக்கேற்ப சொட்டுநீர் பாசனம் மூலம் நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
 • கத்தரி, வெண்டை செடிக்கு காய்த் துளைப்பான், சிலந்தி பேன், சிவப்பு சிலந்தி பேன், இலைப்புள்ளி நோய், மஞ்சள் நரம்பு நோய் மற்றும் சாம்பல் ஆகிய நோய் தாக்கும்.
 • இவற்றைக் கட்டுப்படுத்த, கார்பரில், புரோபினோபாஸ், குயினல்பாஸ், பெவிஸ்டின் ஆகிய பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
  அறுவடை
 • வெண்டை பயிரிட்ட, 90 முதல் 100 நாட்களிலும், கத்தரி பயிரிட்ட, 50 முதல் 120 நாட்களிலும் அறுவடை செய்யலாம்.
 • வெண்டை ஒரு ஹெக்டேருக்கு, 25-30 டன்னும், கத்தரி ஒரு ஹெக்டேருக்கு, 50-60 டன்னும் மகசூல் கிடைக்கும்.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “கோடையில் அதிக மகசூல் தரும் 2 வகை காய்கறிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *