நாற்று உற்பத்தி பயிற்சி

“பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குழித்தட்டுகள் மூலம் காய்கறி நாற்று உற்பத்தி பயிற்சி பெறலாம்’ என, ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

  • பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் 2013 நவ., 20ம் தேதி காலை 10 மணி முதல், 1 மணி வரை குழித்தட்டு மூலம் காய்கறி நாற்று உற்பத்தி குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடக்கிறது.
  • பயிற்சியில், குழித்தட்டுகளில் விதைப்பு மற்றும் பராமரிப்பு, நாற்றுகளை பூச்சி, நோய்களிடமிருந்து பாதுகாத்தல் மற்றும் குழித் தட்டுக்களில் நாற்று தயாரிப்பதால் ஏற்படும் நன்மைகள் ஆகியவை குறித்து, வீடியோ கான்ஃபரன்ஸ் மற்றும் செயல் விளக்கங்கள் மூலம் 20 விவசாயிகளுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
  • பயிற்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் நேரில் அல்லது, 04328293592, 04328293251, 09790491566 ஆகிய நம்பரில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு, தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *