வீட்டு தோட்டத்தில் பீர்க்கை சாகுபடி டிப்ஸ்

வீட்டுத் தோட்டத்தில் பீர்க்கங்காயை பயிர் செய்வது குறித்து கூறும், கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின், காய்கறிகள் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர், முனைவர் ஆறுமுகம் கூறுகிறார:

 • உடலில் சேரும் அதிகப்படியான அமிலத்தை, பீர்க்கங்காய் குறைப்பதுடன், நீரிழிவு நோய்க்கும் சிறந்த மருந்து. நார்ச்சத்து அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்கும்.
 • உடல் வெப்பத்தை குறைக்கவும், இளநரையை தடுக்கவும், பீர்க்கங்காய் உதவுகிறது.
 • மலச்சிக்கல் வராமல் தடுப்பதுடன், பீர்க்கங்காய் தோல், விதை, இவற்றின் சாறு, மஞ்சள் காமாலைக்கு மருந்தாகிறது. வெப்ப மண்டல பயிரான இது, 25 – 30 டிகிரி செல்ஷியஸ் இருக்கும் போது, கொடிகளின் வளர்ச்சியும், மகசூலும் அதிகரிக்கும்.
 • அதிக குளிரிலும், அதிக வெப்பத்திலும் வளர்ச்சி குன்றும். ஆடிப்பட்டமான ஜூன், ஜூலை மற்றும் தைப்பட்டமான ஜனவரி, பிப்ரவரி மாதங்கள், விதைக்க தகுந்த மாதம்.
 • பீர்க்கங்காய் விதைகளை நேரடியாக நடலாம் அல்லது பைகளில் நாற்று விட்டு, பின் நாற்றுக்களை எடுத்து, வேறிடங்களிலோ, வயலிலோ பயிரிடலாம்.
 • வீட்டுத் தோட்டத்தில் குழிகள் தயார் செய்து, 2 செ.மீ., ஆழத்தில் குழிக்கு நான்கு விதைகள் இட வேண்டும்; பின் பந்தல் கட்ட வேண்டும்.
 • 3 – 4 நாட்களுக்குள் விதை முளைக்க ஆரம்பிக்கும். ஒரு நாளைக்கு, ஆறு மணி நேரத்துக்கு குறைவின்றி, சூரிய வெளிச்சம் தேவை.
 • பொதுவாக பீர்க்கு, நிறைய நீரையும், மண்ணின் சத்துக்களையும் எடுத்துக் கொள்வதால், இவற்றை வளர்க்க பெரிய தொட்டிகள் தேவை அல்லது 20 லி., கொள்ளளவு கொண்ட, ‘கன்டெய்னர்’கள் தேவை.
 • இதில், மூன்று அல்லது நான்கு செடிகளை, 5 அங்குல இடைவெளியில் வளர்க்கலாம். எறும்புகள் வராமலிருக்க, மஞ்சள் நீரை தெளிக்கலாம்.
 • பெண் பூக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, 10 லி., தண்ணீருக்கு, 2.5 மி.லி., என்ற அளவில், ‘எத்ரல்’ என்ற வினையூக்கியை தெளிக்க வேண்டும். இரண்டு இலைகள் உருவாகிய பின், முதல் முறையும், பின் வாரம் மூன்று முறையும் தெளிக்க வேண்டும். விதைத்ததும் நீர் பாய்ச்ச வேண்டும்.
 • பந்தல் போடும் போது, கொடி சுருள்கள், அதைப் பற்றியபடி வேகமாக மேலே வளரும். அவை மிக அதிகமாக இருந்தால், விளைச்சல் பாதிக்கும்; எனவே அவற்றை கிள்ளி விடலாம்.
 • விதைத்த, 55 நாட்களுக்குள் முதல் அறுவடை செய்து விடலாம். அதன் பின், 5 – 7 நாட்கள் வரையிலும், காய்களை பறிக்கலாம்.
 • வயலில் நடவு செய்யும் போது, 1 ஹெக்டேருக்கு, 15 – 20 டன் வரை விளைச்சல் தரக்கூடியது பீர்க்கங்காய்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *