“இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திக்கான காடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து, ஒரு நாள் இலவசப் பயிற்சி, 2015 ஜூலை, 21ம் தேதி நடக்கிறது’ என, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார். அவர், வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திக்கான காடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்த, ஒரு நாள் பயிற்சி முகாம், 2015 ஜூலை, 21ம் தேதி நடக்கிறது. பயிற்சியில், ஜப்பானியக் காடை இனங்கள், கொட்டகை அமைத்தல், வளர்ப்பு முறைகள் பற்றி விளக்கப்படுகிறது.
மேலும், இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திக்கு தேவையான தீவன அளவுகள், முட்டைகள் சேகரித்து குஞ்சு பொரிக்கும் விதம், நோய்களும் அதை தடுக்கும் முறைகளும் மற்றும் ஜப்பானியக் காடை உற்பத்தி பொருளாதாரம் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும், வேளாண் அறிவியல் நிலையத்திற்கு, நேரில் வந்தோ அல்லது 04286266345, 04286266244, 04286266650 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, ஜூலை, 20ம் தேதிக்குள் பெயர் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். பயிற்சிக்கு வரும் விவசாயிகள், ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்