கால்நடைகளுக்கு மூலிகை சிகிச்சை பயிற்சி

இப்போதெல்லாம் அல்லோபதி மருத்தவத்தில் ஏமாற்றமும் அதிக செலவும் அதிகரித்து வருவதால் பாரம்பரிய மூலிகை மருத்துவ முறைகள் பிரபலமாகி வருகின்றதை பார்க்கிறோம். கால்நடைகள் மற்றும் இதற்கு விலக்கா? இதை பற்றிய ஒரு செய்தி, தினமலரில் இருந்து…
மதுரை திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் கால்நடை மற்றும் கோழிகளுக்கு மூலிகை சிகிச்சை பற்றிய பயிற்சி அளிக்கப்படுகிறது.மைய தலைவர் பண்ணை முருகானந்தம் கூறியதாவது:

  • கால்நடைகளில் மூலிகை சிகிச்சை மூலம் சிறிய நோய்களை குணப்படுத்த முடியும்.
  • உதாரணமாக கால்நடைகளுக்கு ஏற்படும் மடிநோய், வயிற்று உப்புசம், கழிச்சல், அஜீரணம் போன்றவற்றிற்கு ஆங்கில மருந்துகளை பயன்படுத்தாமல் எளிதாக கிடைக்கக்கூடிய மூலிகைகளை கொண்டு குணப்படுத்தலாம். செலவும் குறையும்.
  • இப்பயிற்சியில் மூலிகை மருத்துவத்தின் மூலம் குணப்படுத்தக்கூடிய கால்நடை நோய்கள், மூலிகைகள் மூலம் சிகிச்சை அளித்தல், மூலிகை பண்ணைகளை நேரடியாக பார்வையிடுதல், அவர்கள் இடத்திலேயே மூலிகை பண்ணை அமைத்து கொடுத்தல் பற்றிய விவரங்கள் கற்றுத்தரப்படும்.
  • செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், சுய உதவிக்குழு பெண்கள் கலந்து கொள்ளலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “கால்நடைகளுக்கு மூலிகை சிகிச்சை பயிற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *