மாடுகளுக்கு கோமாரி நோய் – எதிர்ப்பு உணவான "ராகி கூழ்'

கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு உணவாக, ராகி கூழை வழங்குகின்றனர்.

 • ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உட்பட பல மாவட்டங்களில் மாடுகளை கோமாரி நோய் தாக்கி வருகிறது.
 • தடுப்பூசி போடாத, உரிய சிகிச்சை அளிக்காத மாடுகள் உயிரிழக்கின்றன. நோய் பாதித்த மாடுகளுக்கு வாய், தொண்டையில் ஏற்படும் புண்ணால் திட, திரவ உணவுகளை உட்கொள்ள மறுக்கின்றன.
 • இதனால் நாளடைவில் சோர்வடைகிறது. மாட்டின் உடலில் செலுத்தும் மருந்துகளால், பயன் ஏற்படாமல் போகிறது.
 • நோய் பாதித்த மாடுகள், உடலில் சக்தியோடு இருப்பது அவசியம். இதற்கு குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை மாட்டுக்கு “தீனி’ கொடுக்க வேண்டும்.
 • அப்போது தான் மருந்துகளால் நோய் குணமாகும், என்று கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து விவசாயிகளிடம் வலியுறுத்துகின்றனர்.
 • தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் ராகி யை அரைத்து மாவாக்கிய பின், கூழாக்கி சூட்டை ஆற வைத்து, அதனை பாட்டிலில் ஊற்றுகின்றனர்.
 • அத னை மாட்டின் வாயை திறந் து சிறிது, சிறிதாக கட்டாயமாக ஊட்டுகின்றனர்.
 • மாட் டை காக்க விவசாயிகள் தினமும் காலை, மா லை என இரு வேளைகளிலும் மருத்துவர் ஆலோசனைப்படி வழங்கி வருகின்றனர்.
 • இது தவிர வேப்பம்பட்டை, வேலம்பட்டை யை உடைத்து அரைத்து, அதில் தேங்காய், வெந்தயம், பூண்டு, சீரகத்தை, நாட்டு சர்க்கரையுடன் சேர் த்து உருண்டை பிடித்து நோய் பாதித்த மாட்டுக்கு வலுக்கட்டாயமாக ஊட்டுகின்றனர்.
 • இவ்வாறு தொட ர்ந்து செய்தால் மாட்டின் உடலில் சக்தி கூடுவதுடன், தொண்டை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட புண் விரைவில் பூரண குணம் பெறும் என்று விவசாயிகள் நம்புகின்றனர்.
 • மாடுகளை காப்பாற்ற பெரும்பாலான விவசாயிகளும் இந்த முறையை கையாண்டு, மாடுகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை அளிக்கின்றனர்.

நன்றி: தினமலர் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *