ராஜஸ்தான் 'சிரோகி' ஆடு அறிமுகம்

வெப்பத்தை தாங்கி வளரும் ராஜஸ்தான் ‘சிரோகி’ ஆட்டை காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையம் அறிமுகப்படுத்தியது. இந்த ஆடு ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகளவில் வளர்க்கப்படுகிறது. வறட்சி, வெப்பத்தை தாங்கி வளரும். எளிதில் நோய் தாக்காது.

நம் பகுதியில் வளரும் வெள்ளாட்டை விட கூடுதல் எடை இருக்கும். ‘சிரோகி’ ஆட்டுக்கிடாயை காந்திகிராம பல்கலை வேளாண்மை அறிவியல் மையம், திண்டுக்கல் ஆலத்தூரான்பட்டி விவசாயி ஏ.கருப்பையாவிற்கு வழங்கியுள்ளது.

இந்த கிடாயை பயன்படுத்தி உயர்ரக ஆடுகளை உருவாக்க வெள்ளாடுகளில் கலப்பினம் செய்து வருகிறார்.

Courtesy: dinamalar
Courtesy: dinamalar

 

 

 

 

 

 

 

அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் மாரியம்மாள் கூறியதாவது:

கோடை காலங்களில் வெள்ளாடுகளில் கழிச்சல் போன்ற நோய்கள் ஏற்படும். இவை ‘சிரோகி’ ஆடுகளை தாக்காது. ஆறு மாதத்தில் 35 கிலோ வரை இருக்கும் (வெள்ளாடு அதிகபட்சம் 25 கிலோ) . இவற்றின் மூலம் உயர்ரக கலப்பின ஆடுகளை உருவாக்குகிறோம்.

கலப்பின குட்டிகளில் 70 சதவீதம் ‘சிரோகி’ பண்பும், 30 சதவீதம் வெள்ளாடு பண்பும் இருக்கும். குட்டிகள் ஈனும்போது இறப்பு இருக்காது. சினை பிடிக்கும் தன்மை அதிகரிக்கும்.

‘சிரோகி,’ கலப்பின ஆடுகளை படிப்படியாக மற்ற விவசாயிகளுக்கும் வழங்க உள்ளோம், என்றார். தொடர்புக்கு 09442551061.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *