பால் காளான் உற்பத்தி இலவச பயிற்சி

பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், பால் காளான் உற்பத்தி தொடர்பான இலவச பயிற்சி வகுப்பு 2014 மே 20-ம் தேதி நடைபெற உள்ளது என்றார் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி. வெங்கடேசன்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில் காளான் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து உள்ளது. இதனால் சிப்பிக் காளான் பெருமளவில் உற்பத்தி செய்து வருகின்றனர். பால் காளான் உற்பத்தி குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை.

பால் காளானை பொருத்தவரை, சிப்பிக் காளானைவிட அதிக லாபம் தருவதோடு மட்டுமல்லாமல் அறுவடைக்குப் பின் 3 முதல் 5 நாள்கள் வரை வைத்திருந்து உபயோகிப்பதால், சந்தைப்படுத்துதல் மிகவும் எளிது என்பது குறிப்பிடத்தக்கது.

வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மே 20-ம் தேதி பால் காளான் உற்பத்தி செய்வது குறித்த இலவச பயிற்சி வகுப்பு செயல்விளக்கங்களுடன் நடைபெற உள்ளது.

இதில், பால் காளான் குடில் அமைத்தல், உற்பத்தி செய்யும் முறைகள், சந்தைப்படுத்துதல் குறித்து விளக்கங்களுடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும், ஒரு நாள் இலவச பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் தங்களது பெயரை 09787620754 என்ற எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *