சாமை பயிரிட்டால் அதிக லாபம்

சாமை பயிரிட்டு விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என வேளாண்மைத் துறையின் உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி கூறினார். சாமை சிறு தானியங்களில் ஒரு வகை. அவர் கூறியதாவது:

  • முதுகு வலிக்கு சாமை ஒரு நல்ல உணவு என்பதால், சாமை பயிருக்கு எப்போதும் சந்தையில் வரவேற்பு உண்டு. எனவே, இதைப் பயிரிட்டால் எப்போதும் சந்தை வாய்ப்பு உண்டு.
  • சாமைப் பயிர் சாகுபடிக்கு ஏற்ற மாதம் பிப்ரவரி ஆகும். ஒரு ஏக்கருக்கு விதையளவு 5 கிலோ தேவைப்படும். கலப்பையைப் பயன்படுத்தி, வரிசையில் விதைப்பு செய்யலாம்.
  • ஒரு ஏக்கருக்கு 2 டன் தொழு உரத்தை கடைசி உழவின்போது பரப்பு உழவு செய்ய வேண்டும். மேலும், அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 17.6 கிலோ தழைச் சத்தும், 8.8 கிலோ மணிச் சத்தும் இட வேண்டும்.
  • விதைத்த 20-ஆவது நாளில் வரிசைக்கு வரிசை 22.5 செ.மீ இடைவெளியும், செடிக்குச் செடி 7.5 செ.மீ இடைவெளி இருக்கும்படிக் களைய வேண்டும். இப்படிச் செய்வதால் அதிகமாகத் தூர்கள் வரும். கதிர்கள் அதிகம் வரும்.
  • இந்தப் பயிரை பொதுவாக எந்த நோயும் தாக்குவதில்லை. குருத்து ஈ சாமையைத் தாக்கி விளைச்சலை மிகவும் பாதிக்கிறது. இப்பூச்சியைக் கட்டுப்படுத்த விதைப்பைத் தள்ளிப் போடாது பருவ மழை தொடங்கிய உடனே விதைக்கலாம் என்றார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *