காட்டாங்கொளத்துார் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில், 2015 ஜூன் 16 மற்றும் 17ம் ஆகிய தேதிகளில், விவசாயிகளுக்கான சிறு தானிய உற்பத்தி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, வேளாண் உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் பத்மாவதி கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, சிறு தானியங்கள் உற்பத்தி செய்வது குறித்து தொழில்நுட்ப பயிற்சி, பொத்தேரி காட்டுப்பாக்கம் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில், ஜூன் 16 மற்றும் 17ம் ஆகிய தேதிகளில் அளிக்கப்பட்ட உள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள், இம்மாதம், 10ம் தேதிக்குள், மாவட்ட வேளாண் உழவர் பயிற்சி நிலைய அதிகாரிகளிடம் நேரிலோ அல்லது 09952916247 என்ற அலைபேசியிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்