ஆப்ரிக்க ராட்சச நத்தை பற்றி நாம் எற்கனவே படித்து உள்ளோம். இந்த நத்தையை கட்டுபடுத்தும் முறைகள் பற்றிய ஒரு செய்தி:
இந்த நத்தை 19 சென்டிமீட்டர் வரை வளரும். மழை காலங்களில் பெருகும். வெண்டை, பப்பாளி, பீன்ஸ், என்று எல்லா காய்கரி செடிகளையும் விட்டு வைக்காது
இந்த நத்தைகளை கட்டுபடுத்தும் வழிகள்:
1. இவை ஒளிந்து இருக்கும் இடங்களை கண்டு பிடித்து அழிக்க வேண்டும்
2. பப்பாளி செடியின் தண்டுகளை இவை தின்ன வரும் என்பதால், அவற்றை பொறி போன்று பயன் படுத்தலாம்
3. நீரில் நனைத்த சாக்கு பைக்குள்ளே பப்பாளியின் இலைகளை வைத்து பொறி போல் பயன் படுத்தலாம்
4. சாமந்தி பூவை அரண் போல் பயன் படுத்தலாம்
5. எங்கு இந்த நத்தைகள் அதிகம் காண படுகின்றனவோ, அங்கே சுண்ணாம்பு அல்லது ப்ளீச்சிங் பவுடர் இடலாம்
6. உப்பு இடுவதும் இவற்றை கட்டு படுத்தும்
7. இவற்றை தின்னும் மரவட்டை வகை பூச்சிகளை தோட்டத்தில் இடலாம்
நன்றி: ஹிந்தி நாளிதழ்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்