விவசாயி தான் உலகத்தின் முதல் சூழலாளி.
ஒரு வயலோ தோட்டமோ, அவனுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அங்கே சிறு பறவைகள் நன்மை செய்யும் பூச்சிகள், பாம்புகள், ஆந்தைகள் என பல உயிரினங்கள் அங்கே வசிக்கும்.
இதை உணர்ந்து அதற்கேப்ப விவசாயம் செய்தான் போன தலைமுறை விவசாயி. ஒன்றுக்கொன்று எப்படி வாழ்க்கை சேர்ந்து இருந்தது என்று அவனுக்கு தெரிந்து இருந்தது. பூச்சிகளை தின்னும் தவளை, அதை தின்னும் பாம்பு, அதை தின்னும் ஆந்தை என்று உயிர் வட்டம் இருந்தது.
இன்றைய சூழ்நிலையில் பணமே பிரதானமான நிலையில், இவை எல்லாம் மாறி வருகின்றன. ரசாயன பூச்சி கொல்லிகள் பூச்சிகளை மட்டும் அல்ல, பறவைகளை, ஆந்தைகளை, வௌவால்களை கொன்று வருகின்றன. ஆனால் எளிதாக பூச்சிகள் மட்டும் அழிந்துவிட்டதாக நாம் நினைக்கிறோம்.
இந்த மாதிரியான சிந்தனை இப்போது எவ்வளவு தூரம் போயிருக்கிறது என்று தெரியும் போது மனம் கஷ்டப்படுகிறது. இதோ ஒரு உதாரணம்:
ஸ்பெயின் நாட்டில் ஆலிவ் எண்ணெய் எல்லார்க்கும் பிடித்தது. ஆலிவ் எண்ணெய் செய்ய ஆலிவ் பழங்களை பறிக்க வேண்டும். இரவில் இவற்றை பறித்தால் நல்ல வாசனையாக இருக்கும்.இதனால் விவசாய தொழிலாளிகள் இரவில் பிரிப்பார்கள். வெளி நாட்டில் இருந்து இதற்காக தொழிலாளிகளை அழைத்து வந்தார்கள்.
இப்போது இயந்திரங்கள் வந்து விட்டன. இவை இரவில் தானே சென்று பழங்களை உறுஞ்சி பறிக்கின்றன. ஆனால் இந்த நேரத்தில், அந்த ஆலிவ் மரங்களில் கூடு கட்டியுள்ள பறவைகளும் உறிஞ்சப்பட்டு கொல்ல படுகின்றன. இப்படி ஒவ்வொரு வருடமும் 26 லட்சம் பறவைகள் அநியாயமாக கொல்ல படுகின்றன. இருளில் கண்ணை கூசும் விளக்குகளை போட்டு கொண்டு வரும் இந்த ட்ராக்டர்கள் மூலம் கண் கூசி பறவைகள் தப்பிக்க முடியாமல் கொடுமையாக கொல்ல படுகின்றன
முன்பு மனிதர்கள் பறித்த போது பார்த்து கையால் பிரித்தார்கள். இன்னொரு உயிர் என்ற அனுதாபம் இருந்தது. இப்போது எல்லாம் இயந்திரமயம்.
இவற்றை பகல் நேரத்தில் பறித்தால் இந்த சம்பவம் நடக்காது. ஆனால், சந்தையில் ஆலிவ் எண்ணெய் அதிகம் விலை போகாதே!!.
மனிதன் எப்போது பணம் மட்டுமே முன்னிருதி செயல் செய்வதை நிறுத்தினால் தான் உலகத்திற்கு எதிர்காலம்!
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்