சரத் பவர் விவசாய மந்திரி

சுற்று சூழல் மந்திரியாக இருந்த திரு ஜெய் ராம் ரமேஷ் அவர்கள் அந்த துறை யில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். இந்த துறையில் ஒரு பெரிய மாற்றம் கொண்டு வந்தார் அவர். மரபணு மாற்ற பட்ட விதைகளை கொண்டு வருவதற்கு தடை விதித்தார். காடுகளை அழித்து வரும் சுரங்க பண முதலைகளை எதிர்த்தார். இதற்கான விலையை கொடுத்து விட்டார்.
தெளிவான சிந்தனை, அயர்ச்சி இல்லாத ஓட்டம், தனக்கு தான் எல்லாம் தெரியும் என்று இல்லாமல் அடுத்தவர்களை கேட்டு தெரிந்து கொள்ளும் பாங்கு என்று மந்திரி சபையில் இருந்த ஒரு சில நல்ல மந்திரி அவர்.

அவரை வேளாண்மை மந்திரியாக மாற்றி இருக்கலாம்.

சரத் பவர் ஒரு பழம் பெருச்சாளி. அவரை பற்றிய ஊழல் பட்டியலை சிறிது நாட்கள் முன்பு இந்திய டுடே பத்திரிகை வெளியிட்டது. ராசா, கனிமொழி எல்லாம் பிச்சை வாங்க வேண்டும் இவரிடம். அவருடைய சொத்து கணக்கை இங்கே பார்க்கலாம்..   IPL, Lavasa, BCCI என்று அவருக்கு எத்தனையோ வேலைகள். எதற்காக வேளாண்மை துறை அவருக்கு?
இந்திய வேளாண்மை நோக்கி இருக்கும் சவால்களை வெல்ல வேண்டும் என்றால் பழைய பசுமை புரட்சி போன்ற எண்ணங்கள் இல்லாத, புதிய எண்ணங்கள் கொண்ட, விவசாயிகளை கேட்டு தெரிந்து கொள்ளும் எளிய மனோபாவம் கொண்ட, ஓர் இளைஞர் ஒரு மந்திரியாக தேவை.  80 வயதான, பழம் பெருச்சாளி இல்லை!


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “சரத் பவர் விவசாய மந்திரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *