சிறுநீர் ஒரு இயற்கை உரம் என்பதை முன்பே படித்து உள்ளோம்
இப்போது Scientific American என்ற மதிப்புக்குரிய இதழில் சிறுநீரை உரமாக பயன் படுத்தி பரிசோதனை முடிவுகள் பிரசுரிக்க பட்டு உள்ளன.
இவை பின்லாந்தில் உள்ள என்ற பல்கலை கழகத்தில் உள்ள என்ற ஆராய்ச்சியாளர்கள் 14 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்ததின் முடிவு:
- வெள்ளரி பீட்ரூட், கேபேஜ் போன்ற காய்கறிகள் பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன
- 4 விதமாக இவை வளர்க்கப்பட்டன: ஒன்றில் ரசாயன உரங்கள், ஒன்றில் சிறுநீர், ஒன்றில் சிறுநீர் மற்றும் சாம்பல், ஒரு உரமும் இல்லாமல் இவை வளர்க்க பட்டன
- 84 நாட்கள் பின் சாகுபடி செய்ததில், சிறுநீர்+சாம்பல் மற்றும் சிறுநீர் இடப்பட்டவை சாகுபடி செய்யப்பட்ட காய்கறிகள் 10% முதல் 27% வரை எடை அதிகம் இருந்தன.
- சுவையிலும், பார்க்கவும், ஊட்ட சத்துக்கள் எதிலும் பெரிய மாற்றம் எதுவும் இல்லை
சிறுநீரில் நைட்ரோஜென், போஸ்போரஸ் பொட்டாசியம் எல்லாம் இருக்கின்றன
மனித சிறுநீர் 99% sterile திரவம் – அதாவது சிறுநீர் மூலமாக எந்த கிருமிகளோ, பாக்டீரியா வைரஸ் பரவ முடியாது
ஒருவர் ஒரு நாளில் கழிக்கும் சிறுநீர் 10x 10 அடி உள்ள நிலத்திற்கு உரமாக போதும்.
நம் நாட்டில் உள்ள பஸ் ஸ்டான்ட் ரயில்வே ஸ்டேஷன் போன்றவற்றில் சிறுநீரை சேர்த்தாலே போதும் – நம் நாட்டின் ரசாயன உர தேவையை குறைப்பதற்கு.. இதை யாரவது பிசினஸ் ஆக எடுத்து செய்தால் நிச்சியம் வெற்றி.
சிறுநீர் உரம் பற்றிய மேலும் சில தகவலகளை இங்கே படிக்கலாம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்