இந்தியாவில், நம் கண் முன்பே நம் தலைமுறையில் அழிய காத்து, கடைசி தருணங்களை எண்ணி கொண்டிருக்கும் ஒரு பறவை இது. Great Indian Bustard
ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் காணப்பட்டது. இப்போது வெறும் 150 மட்டுமே உள்ளதாக கருத படுகிறது. வறட்டு பிரதேச புலவளிகள் இதற்கு இடம். சுதந்திர இந்தியாவின் தேசிய பறவை ஷார்ட்ல்ஸ்டில் இதுவும் இருந்தது.
இப்போது ராஜஸ்தான், குஜராத் கர்நாடக சில இடங்களில் மட்டும் அப்பப்போது காணப்படுகிறது.
இதன் அழிவை மனிதன் எப்படி உருவாக்கி வருகிறான்?
விவசாயம் செய்ய முடியாத இடங்களிலும் பாசனம் மூலம் விவசாயம், தெரு நாய்கள் தாக்கு, அளவுக்கு அதிகமான ரசாயன பூச்சி மருந்து தெளிப்பு. இப்போது எல்லா இடங்களிலும் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள்.
நம்மால் முடிந்தது மேலே செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் இவை வாழாத இடங்களில் செல்லலாம். அல்லது நிலத்தடியில் செல்லலாம். இதற்கு குரல் கொடுங்கள்..
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்