நரேந்திர மோடி அவர்கள் இந்திய தேர்தல் வரலாற்றில் ராஜீவ் காந்திக்கு பின் அதிக அளவு வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகள் நடந்த UPA அரசால் விவசாயம் மிகவும் மாறி விட்டது.
100 நாட்கள் திட்டத்தால் கிராம புறங்களில் வேலை செய்பவர்கள் இப்போது இல்லை. ஆட்கள் தட்டுபாடு மூலம் வேளாண்மை இயந்திர மயம் ஆகி வருகிறது.
டீசல் விலை ஏற்றம் மற்றும் மின் பற்றாக்குறை மூலம் விவசாயம் செய்வது லாபம் அற்ற ஒரு தொழில் ஆகி வருகிறது.
புவி வெப்பம் ஆகும் காரணத்தால், மழை
குறைவது, புது விதமான பூச்சிகள் படை எடுப்பு, இருக்கும் பூச்சி கொல்லிகள் திறன் இழப்பு என்று பல பிரச்னைகள்..
மதிய வேளாண்மை அமைச்சராக இருந்த சரத் பவர் கிரிக்கெட் மற்றும் மகாராஷ்டிரா அரசியலில் மட்டுமே
கவனம் செலுத்தினார்.
புதிதாக வந்துள்ள NDA அரசு விவசாயத்தின் முக்கியத்தை அறிநது செயல் படும் என்று நம்புவோம்..
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்