புதிய அரசும் விவசாயமும் – III

மரபணு மாற்றப்பட்ட பயிர்களை    வயல் அளவில் வயல்வெளிச் சோதனைகளை அனுமதிக்க கூடாது என்று உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நடை பெற்று கொண்டிருகிறது. மக்களவை பொது தேர்தல் காரணமாக உச்ச நீதி மன்றம்  வழக்கை ஜூலை 2014 வரை தள்ளி போட்டு இருக்கிறது

இந்த வழக்கில் புதிய NDA அரசு எந்த நிலை எடுக்க போகிறது என்பது முக்கியம்

மரபணு மாற்றப்பட்ட பயிர்களை ஆதரிக்கும் விஞானிகள் கொடுக்கும் ஒரு முக்கிய  காரணம்: இந்தியாவின் ஜனத்தொகை பெருகி கொண்டே போகிறது. இந்த ஜனதொகைக்கு உணவு கொடுக்க
மரபணு மாற்றப்பட்ட பயிர் தொழிற்நுட்பம் தேவை என்று.

ஆனால் இந்தியாவின் விவசாயிகள் இந்திய ஜனதொகைக்கு மேலேயே அதிகம் சாகுபடி செய்கிறார்கள் என்பது உண்மை. பஞ்சாபிலும் ஹர்யானவிலும் உள்ள மண்டிகளிலும் கொடொவ்ன்களிலும் எடுக்க படாமல் கெட்டு போகின்றன

நம் நாட்டில் உள்ள உணவு விலைவாசியும் பஞ்சமும் குறைந்த அளவு சாகுபடியால் வரவில்லை இருப்பதை பகிர்ந்து கொள்ளும் விதத்தில் தான் உள்ளது (It is not production problem, it is distribution problem)

இதை புரிந்து கொண்டால் அபாயம் கொண்ட புது தொழிற்நுட்பங்கள் தேவையே இல்லை. என்ன செய்ய போகிறார்கள் NDA அரசு? பொறுத்திருந்து பார்ப்போம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *