2015 பட்ஜெட் பற்றிய கருத்துக்கள்

2015 வருட பட்ஜெட் சனிகிழமை மதிய நிதி துறை அமைச்சர் அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதன் நகலை இந்திய அரசின்  இணையத்தளத்தில் படிக்கலாம்.

இந்த நாட்டில் 50% மக்கள் தொழிலாக இருக்கும், வாழ்வாதாரம் இருக்கும் வேளாண்மை பற்றி மொத்தமே இரண்டு மூன்று பத்திகள் தான்!

இதோ, இந்த பத்திகளின்  சாராம்சம்:

1. மண் வளத்தை பாதுக்கும் Paramparagat Krishi Vikas Yojana என்ற திட்டம்
2. சொட்டு நீர் பாசனத்திற்கு Pradhanmantri Gram Sinchai Yojana’ என்ற திட்டம் – இதற்கு ரூ 5300 கோடி
3. நபார்ட் வங்கிக்கு 2015-16 வருடத்திற்கு ரூ 25000 கோடி
4. 2015-16 வருடத்திற்கு விவசாயத்திற்கு ரூ 8.5  கோடி கடன் ப்ரொவிஷன்

மற்றபடி, விவசாயத்தில் இன்று டாப் பிரச்சனைகளான விவசாயத்தில் அதிகரித்து வரும்  செலவுகள், சந்தைகளில் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்காமை, கரும்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்து ஆலைகளில் இருந்து பணம் எதிர்ப்பார்த்து நிற்கும் நிலைமை, நிலங்கள் ரியல் எஸ்டேட் ஆகி வருவது, இடைத்தரகர்கள் அதிகாரம், குளிர்பதன சேமிப்பு போன்ற அடிப்படைவசதிகள் அமைப்பது போன்ற வற்றை சத்தமே இல்லை. எல்லா பத்திகளும் corporate சங்கதிகள் தான்.

விவசாயிகள் அரசாங்கத்தை எதிர்பார்த்து நிற்பதை நிறுத்தி தம் வாழ்கையை தாமே எதிர் கொள்வதே சரி.

இயற்கை வேளாண்மை மூலம் செலவுகளை குறைப்பது, மொபைல் போன் மூலம் நேரடி விற்பனை சேனல்கள் உருவாக்கி உற்பத்தி பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க செய்வது , மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் செய்வது, இன்டர்நெட் மூலம் விவரம் அறிந்து  காலத்திற்கு ஏற்ற பயிர்டுவது,ஊடு பயிர்கள் மற்றும் கால்நடை/மரங்கள் வளர்த்து வருமானத்தை பெருக்கி கொள்வது என்று பல வழிகளை நாம் பின்பற்றினால் நிச்சயம் ஜெயிக்கலாம். கெளரவத்துடனும் வாழலாம்.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “2015 பட்ஜெட் பற்றிய கருத்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *