கொடி அமைத்து தக்காளி சாகுபடி செய்தால் லாபம்

பெரம்பலூர் அருகே,  குறைந்த செலவில் நவீன முறையில் தக்காளி சாகுபடி செய்து அதிகளவில் விவசாயி ஒருவர் லாபம் ஈட்டி வருகிறார். பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன்(36). பட்டதாரியான இவர் பணப் பயிரான வெங்காயம் உள்ளிட்ட பல பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். இந்நிலையில் நாம் அன்றாட சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் தக்காளியில் ரெட் ரூபி என்ற ரக தக்காளியை நவீன முறையில் அவரது வயலில் 20 சென்ட் நிலத்தில் சாகுபடி செய்துள்ளார்.

இது குறித்து விவசாயி வெங்கடேசன் தெரிவித்தாவது:

  • வழக்காமான முறையில்  தக்காளி செடியை தரையில் படர விடுவதால், தக்காளி காய்கள் காய்க்கும் சமயத்தில் தண்ணீர் பாய்ச்சுவதாலோ, அல்லது தரையில் காய்கள் விழும்போது, அதிகளவு வீணாகி விளைச்சலின் அளவை குறைக்கும்.
  • வழக்கமான விவசாயம் செய்யும் செலவைவிட சற்று கூடுதலாக செலவுசெய்து, கொடிகள் அமைத்து தற்போது பயிரிட்டுள்ளதை போன்று செய்தால், விளைச்சல் அதிகமாவதுடன், பிரஷ் ஆகவே தக்காளிகளை அதிகளவு வயிலில் இருந்து பறிக்க முடியும்.  மேலும், அதிக செடிகளை நடும் அளவிற்கு இடப்பரப்பு முழுமையாக பயன்படுத்தப்படுகிறது.  இதனால் கிடைக்கும் கூடுதல் மகசூலுக்கு விலையும் அதிகமாக கிடைக்கும். தரமும் கூட்டப்படுகிறது.
  • பயிர் செய்யும் விவசாயிகளுக்கு கூடுதல் லாபமும் கிடைக்கும்.
  • 20 சென்ட் நிலத்தில் தக்காளியை பயிரிட எனக்கு ரூ. 20,000 செலவானது. இதில் சுமார் 8 டன் மகசூல் கிடைக்க வேண்டும். டன் ஒன்றிற்கு ரூ. 6,000 வீதம், ரூ. 48,000 கிடைக்க வேண்டும். செலவு போக ரூ. 28,000 கிடைக்கும். இதுவே பராமரிப்பு அதிகமானால் இன்னும் சற்று கூடுதலாக லாபம் கிடைக்கும். இது நான் வயலிலேயே நேரடியாக வியாபாரிகளுக்கு விற்றுவிடுவதால் கிடைக்கும் தொகையாகும்.
  • இதனை, சந்தையிலோ அல்லது நேரடியாக பொதுமக்களிடம் விற்றால் இரண்டு மடங்கு லாபாம் கிடைக்கும். அதாவது 20 சென்ட் நிலத்தில் விவசாயி முறையான பயிர் பராமரிப்பு, நீர் பாய்ச்சுதல், பறவைகள், அணில்கள், எலிகளிடம் இருந்து பாதுகாப்பு செய்தால் இன்னும் கூடுதலான நல்ல மகசூல் கிடைக்கும். ரூ. 50,000 முதல் ரூ. 60,000 வரை குறைந்த செலவில் கூடுதல் லாபம் ஈட்டலாம் என தெரிவித்தார்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

One thought on “கொடி அமைத்து தக்காளி சாகுபடி செய்தால் லாபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *