தக்காளி ரகங்கள்

இரகங்கள் : கோ.1, கோ.2, மருதம் (கோ 3), பிகேஎம் 1, பூசாரூபி, பையூர் 1, சிஒஎல்சிஆர்எச் 3, அர்கா அப்ஜித், அர்கா அஃஹா, அர்கா அனான்யா, அர்கா அலோக், அர்கா சிரஸ்டா, அர்கா வர்தன், அர்கா விசால், அர்கா விகாஸ், அர்கா செவ்ரோப், அர்கா மெகாலி மற்றும் அர்கா அஹ்தி.

thco3த.வே.ப.க தக்காளி வீரிய ஒட்டு கோ – 3:

HN2 x CLN2123A வின் வீரிய ஒட்டு. மகசூல் 96.2 டன்/ எக்டர். பயிரின் வயது 140-145 நாட்கள். பயிர் பாதி நிர்ணயிக்கப்பட்டு (90-95 செ.மீ) மற்றும் அதிக அடர்த்தி நடவு முறைக்கு உகந்தது. பழங்கள் வட்டமாகவும், மிதமான அளவு, குழுக்கள் 3-5 ஆகவும் அதிக விளைச்சல் இலைசுருள் வைரசிற்கு எதிர்ப்புத்திறன் கொண்டதுடன், வேர் முடிச்சு நூற்புழுவிற்கு எதிர்ப்புத் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

 

 

கோ. டி.எச் 2 (2006):

coth2வீரிய ஒட்டானது LCR 2 x CLN 2123A. இது இலை சுருள் வைரசிற்கு எதிர்ப்புத் திறன் கொண்டது மற்றும் எவ்வித பூச்சிகொல்லியும் தெளிக்காமல் 90.2 டன்/ எக்டருக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பழங்கள் வட்டமாகவும், மிதமான அளவுடனும் பழுக்காத பழங்கள் வெள்ளையான பச்சை நிறத்துடனும், பழுத்த பழங்கள் நல்ல சிவப்பு நிறத்துடன் காணப்படுவதுடன், 3-5 பழங்கள் குழுக்களாக காணப்படும்.

 

 

கோ.டி.எச் 1 (1998):

coth1வீரிய ஒட்டானது IIHR 709 x LE 812. மகசூல் 95.9 டன்/ எக்டர். வயது 115 நாட்கள். பழத்தின் அமிலத்தன்மை (0.61%)

 

 

 

பி.கே.எம் 1:

pkm1 பழம் தட்டையாக உருண்டையாக பச்சை தோல் முகப்பாகவும், நீண்ட தொலைதூர பயணத்திற்கு ஏற்றதாகவும் உள்ளது. மகசூல் 30-35 டன்/ எக்டர். வயது 135-137 நாட்கள்.

 

 

 

 

 

 

கோ 1 (1969):

co1கல்யாண்பூர் இரகத்திலிருந்து மறுதேர்வு செய்யப்பட்டது. பாதியளவு நிர்ணயிக்கப்பட்ட இரகம், பழமானது எந்த வரிப் பள்ளமும் இல்லாமல் வட்டவடிவில் சிவப்பு நிறத்தில் உள்ளது. மகசூல் 25 டன்/ எக்டர். இதன் வயது 135 நாட்கள்.

 

 

 

கோ 2 (1974):

இதுco2 ரஷ்ய முன்னோடியிலிருந்து தெரிவு செய்யப்பட்டது. நிர்ணயிக்கப்படாத பூத்தல் வகை. சராசரி பழ எடை 50-60கி. பழங்கள் தட்டையாகவும், 4-5 பள்ளங்கரைக் கொண்டது. மகசூல் 28-30 டன்/ எக்டர். பயிரின் வயது 145 நாட்கள்.

 

 

 

கோ 3 (1980)

co3இது கோ1 இரகத்தின் தூண்டப்பட்ட சடுதிமாற்ற இரகம். நிர்ணயிக்கப்பட்ட இரகம், நெருக்க நடவு (30×30 செ.மீ) உகந்தது. கொத்துகொத்தாக காய்க்கும் வகை. மகசூல் 40 டன்/ எக்டர். வயது 100-105 நாட்கள்.

 

 

 

பையூர் 1:

இரகமானது பூசாரூபி மற்றும் கோ 3ஐ இனக்கலப்பு செய்வதன் மூலம் கிடைக்கப் பெற்றது. மானாவாரி பயிருக்கு உகந்தது. மகசூல் 30 டன்/ எக்டர்.

நன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *