தக்காளி நடவு செய்து வரும் விவசாயிகள் அசோஸ்பைரில்லம் என்ற நுண்ணுயிரியை தெளிக்க வேண்டும் என வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தக்காளி நாற்று நடவு செய்வதற்கு முன்பு, பாத்திகளில் உள்ள தக்காளி நாற்றுகளை எடுத்து, ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், ஒரு கிலோ பாஸ்போ பேக்டீரியாவை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்த கரைசலில், வேர்பகுதியை நனைத்து, பின்பு நடவு செய்யவேண்டும்.
அப்போது தக்காளிச்செடிக்கு தேவையான தளைச்சத்து மற்றும் மணிச்சத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இதனால் தக்காளிச் செடிக்கு அடிக்க வேண்டிய உரங்களில் இருந்து 20 சதவீதம் உரச் செலவுகளை குறைக்கலாம்.
இவ்வாறு செய்யம்போது, தக்காளிச் செடியின் காய்ப்புத்திறன் அதிகரிக்கிறது.
இந்த நுண்ணுயிரிகள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடைக்கிறது என வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்