மணல் பாங்கான நிலத்தில் விளையும் தர்பூசணி

  •  கோடையில் குளிர்ச்சி தரும் பழமான தர்பூசணி, மணல் பாங்கான நிலத்தில், குறைந்த அளவு தண்ணீரில் விளைகிறது.
  • தர்பூசணியில், 90 சதவீதம் வரை நீர் நிரம்பி இருந்தாலும், இரும்பு சத்து உள்ளிட்ட உடலுக்கு வலிமை தரும் சத்துகள் இருந்தாலும், கோடையில் தாகம் தணிக்கவே, பெரும்பாலானோர் சாப்பிடுகின்றனர். அதிகளவு நீர் நிரம்பிய தர்பூசணி, குறைந்த அளவு தண்ணீர் பாசனத்தில் தான் சாகுபடி செய்யப்படுகிறது என, விவசாயிகள் தெரிவித்தனர்.
  • தர்பூசணி சாகுபடிக்கு, மணல் பாங்கான நிலமே சரியான தேர்வு.
  • டிசம்பர், ஜனவரி மாதங்களில் விதைப்பு செய்யப்பட்டு, கோடையில் அறுவடைக்கு வருகிறது.
  • 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
  • காய்க்கும் பருவத்தில் அதிகளவில் வெயில் இருந்தால், பழம் கூடுதல் இனிப்பு சுவையுடன் இருக்கும்;
  • பனி, தர்பூசணி கொடிகளுக்கு எதிரி. ஆனால், முன்பருவ காலத்தில் கூடுதல் விலை கிடைக்கும் என்பதால், அக்டோபர் – நவம்பர் மாதங்களில், நிழல் வலை கூடாரத்தில், குழித்தட்டு முறையில் வளர்க்கப்படும் நாற்றுகளை கொண்டு நடவு செய்யப்படும் தர்பூசணி, ஜனவரி – பிப்ரவரி மாதத்திலேயே விற்பனைக்கு வந்து விடுகின்றன.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *