திராட்சை பயிர் டிப்ஸ்

செவட்டை நோய் பாதிப்பை தவிர்க்க மழைக்காலம், குளிர்காலத்தில் திராட்சை உற்பத்தி செய்யாமல் இருப்பதே சிறந்த வழி என தோட்டக்கலைத்துறை தெரிவித்து உள்ளது.

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த பனி காரணமாக கம்பம், சின்னமனூர் பகுதியில் திராட்சையில் செவட்டை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க வழியில்லை என தோட்டக்கலைத்துறை கூறி உள்ளது.தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

  • கம்பம் பகுதியில் திராட்சையில் ஆண்டுக்கு மூன்று முறை சாகுபடி எடுக்கப்படுகிறது.
  • இதனால் திராட்டை அறுவடை முடிந்த உடனே கவாத்து செய்து அடுத்த சாகுபடிக்கு தயாராகி விடுகின்றனர். இது மிகவும் தவறான அணுகுமுறை.
  • திராட்சை அறுவடை முடிந்ததும் 45 நாள் கழித்து கவாத்து செய்தால், ஆண்டுக்கு இருமுறை மட்டும் சாகுபடி கிடைக்கும்.
  • இப்படி கிடைக்கும் சாகுபடி மூலம் தரமான திராட்சை கிடைக்கும்.
  • மழைக்காலம், குளிர்காலத்தில் திராட்சை சாகுபடி செய்வது தவிர்க்கப்படும்.
  • மழைக்காலம், குளிர்காலத்தில் செவட்டை நோய் திராட்சையினை தாக்கும். இந்த பாதிப்பினை தடுக்க அதிக மருந்து செலவிட வேண்டி வரும். இந்த காலத்தில் விற்பனை வசதியும் கிடைக்காது. எனவே உற்பத்தி செலவோடு ஒப்பிட்டு பார்த்தால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும். இவ்வாறு கூறினர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *