- அகத்தி, வேம்பு, பூவரசு, கருவேல், குடைவேல், பலா, கொடுக்காப்புளி, ஆல், அரசு, உதியன், இலந்தை போன்ற மரங்களின் இலைகளை வறட்சியின் போது தீவனமாகக் கால்நடைகளுக்கு தரலாம்.
- மர இலைகளை தீவனமாக வழங்கும்போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதன்படி மர இலைகளை பிற புல் வகைகள் மற்றும் உலர்ந்த தீவனங்களுடன் சிறிது சிறிதாக கொடுக்க வேண்டும்.
- வழங்குவதற்கு முன் 6:00 மணி முதல் 8:00 மணி நேரம் இலைகள் வாட வேண்டும். உலர வைத்து ஈரப்பதம் 15 முதல் 20 சதவீதம் உப்பு அல்லது வெல்லக் கரைசலை தெளிக்கலாம்.
- இலைகளை விரும்பி சாப்பிடாத கால்நடைகளை விரும்பி சாப்பிடும் கால்நடைகளின் அருகில் கட்டி வைத்து தீவனமாக தரலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் தீவனமிட்டால் கால்நடைகள் நல்ல முறையில் உண்ணும்.
- கால்நடைகளை கடும் வெயில் நேரத்தில் அதாவது காலை 11:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. நல்ல சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும்.
- தீவனத் தட்டைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொடுத்தால் கழிவுகள் குறையும். மழையின்றி வாடும் இளம் சோளப்பயிரில் மாடுகளை விட்டு மேய்க்கக்கூடாது.
- இளம் சோளப்பயிரில் ‘சைனிக் அமிலம்’ நச்சுத்தன்மை உடையதால் இதனை சாப்பிடும் கால்நடைகள் இறக்க நேரிடலாம். முழுத் தீவனத்தையும் ஒரே நேரத்தில் கொடுக்காமல் இரண்டு, மூன்று தடவை பிரித்து கொடுக்கலாம்.
- கால்நடைகள் பழக்கத்துக்கு அடிமையானவை எனவே, தீவனத்தில் திடீரென மாறுதல் செய்யக்கூடாது. ஒரே நேரத்தில் மொத்த தீவனத்தையும் கொடுத்தால் கால்நடைகளுக்கு வயிறு உப்புசம், அலர்ஜி போன்ற நோய்கள் ஏற்படும்.
- தொடர்புக்கு 9486469044 .
– டாக்டர் வி. ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்