துவரை பயிரில் உர நிர்வாகம்

உயிர் உரங்களைக் கொண்டு விதை நேர்த்தி செய்தல்

  • துவரை பயிரில் பூஞ்சைக் கொல்லி (அல்லது) உயிர்க் கட்டுப்பாட்டுக்காரணி கொண்டு விதை நேர்த்தி செய்தபின் 24 மணிநேரம் கழித்து மீண்டும் பாக்டீரியா பயிர் வளர்ப்பு கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • ஒரு எக்டருக்கு தேவையான விதையை விதை நேர்த்தி செய்ய ரைசோபியல் கல்சர் சி.ஆர்.ஆர் / சி.பி.ஆர், பாஸ்போ பாக்டீரியா (பேசில்லஸ் மெகாடீரியம்) மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தயாரித்த பி.ஜி.பி.ஆர் (சூடோமோனஸ் எஸ்.பி) ஒரு பாக்கெட் (200கி) அளிக்கவும். செம்மண்ணாக இருந்தால் வி.பி.ஆர் 1 ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும்.
  • விதை நேர்த்தி செய்வதற்கு மட்டும் ரைசோபியம் உடன் சேர்ப்பானாக அரிசி கஞ்சி சேர்க்க வேண்டும். பி.எஸ்.பி மற்றும் பி.ஜி.பி.ஆர். கொண்டு விதை நேர்த்தி செய்யாவிட்டால் பாஸ்போ பாக்டீரியா 10 பாக்கெட் (2 கிகி) (பேசில்லஸ் மெகாடீரியம்) மற்றும் (2கிகி) பி.ஜி.பி.ஆர் (சூடோமோனஸ் எஸ்.பி) உடன் 25 கிகி தொழுவுரம் மற்றும் 25 கிகி மண் கலந்து விதைப்பதற்கு முன் அளிக்கவும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

  • மானாவாரிப் பயிராக இருந்தால் 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து. 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை ஒரு எக்டருக்கு அடி உரமாக இடவேண்டும். இறவைப் பயிராக இருந்தால் 25 தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 25 கிலோ சாம்பல் சத்து மற்றும் 20 கிலோ கந்தகச் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இடவேண்டும். அடியுரமாக 25 கிலோ ஜிங்க் சல்பேட் இடவேண்டும்.
பயிர்    ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள் (கிலோ)
தழை மணி சாம்பல் கந்தகம்
துவரை மானாவாரி 12.5 25 12.5 10
இறவை 25 50 25 20

குறிப்பு: மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை எனில் ஜிப்சம் மூலமாக கந்தகச் சத்தை இடவும்.

  • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நுண்உரக்கலவை எக்டருக்கு 5 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரமாக நடவு வயலில் இட வேண்டும். (ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற அளவில் நுண்உரக்கலவை மற்றும் தொழுவுரம் சேர்த்து தகுந்த ஈரப்பதத்தில் நிழலில் உலர்த்த வேண்டும்.

பயறு வகை பயிர்களின் உயிர்ம ஆதரங்கள் கொண்டு நைட்ரஜன் சமன் செய்தல்

  • 50 சதவிகித நைட்ரஜனை உயிர்ம ஆதாரங்கள் கொண்டு சமன் செய்யலாம். (எக்டருக்கு 850 கிகி மண்புழு உரம்) மண்ணில் கார அமில தன்மை 6 க்கும் குறைவாக இருக்கும் போது, பயறுவகை பயிர்களுக்கு சுண்ணாம்பு அளிக்க வேண்டும்.

இலைவழி நுண்ணூட்டம்

டைஅமோனியம் பாஸ்பேட் அல்லது யூரியாஎன்.ஏ.ஏ மற்றும் சாலிசிலிக் அமிலம் தெளித்தல்

  • பூக்கும் முன் இலைத் தெளிப்பாக என்.ஏ.ஏ 40 மிகி/லி ஒரு முறை மற்றும் 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
  • டி.ஏ.பி 20 கி/லி அல்லது யூரியா 20 கி/லி பூக்கும் தருணத்தில் இலைத் தெளிப்பாக அளிக்க வேண்டும் மற்றும் 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை அளிக்க வேண்டும்.
  • சாலிசிலிக் அமிலம் 100 மிகி/லி பூக்கும் முன் இலைத் தெளிப்பாக அளிக்க வேண்டும் மற்றும் 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை அளிக்க வேண்டும்.

நன்றி: தமிழ் நாடு வேளாண் பலகலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *