கோடையில் தென்னையை காக்கும் வழி

தமிழகத்தில் மூன்று மாத கோடை: ஆண்டுக்கு ஆறு மாதம் மித உஷ்ணம் காலம். மூன்று மாதம் குளிர் காலம். அடுத்த மூன்று மாதம் கோடை காலம்.ஒன்பது மாதம் நன்கு வளர்ந்த தென்னை மரங்கள் மூன்று மாத கோடை வெயில் தாக்கி தென்னை மரங்களின் மட்டைகள் பழுப்பேறி சரிந்து செத்து விடுகிறது.

 

55 லிட்டர் தண்ணீர்

  • நாள் ஒன்றுக்கு 3 அங்குலம் வாய் அகலமுள்ள ‘டெலிவரி’ குழாய் மூலம் இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரம் தண்ணீர் சப்ளை கிடைக்குமானால், அந்த தண்ணீரை கொண்டு 1-0 – 25 ஏக்கர் வரை உள்ள தென்னை மரங்களை காப்பாற்றி விடலாம்.
  • ஒரு தென்னை மரம் நாள் ஒன்றுக்கு 55 லிட்டர் – 65 லிட்டர் வரை கிரகித்தால் தான் ஆண்டுக்கு 250 – 300 இளநீர் மற்றும் தேங்காய்கள் தரும்.
  • உரித்த மட்டைகள், உதிர்ந்த மட்டைகள், இலை சருகுகள், பாளை, பன்னாடைகளை தென்னை மரத்தை சுற்றி 5 அடி அகலத்தில் பரப்பி விடும்போது தண்ணீர் ஆவியாவதை தடுத்து ஒரு மாதம் வரை ஈரம் பாதுகாக்கப்படுகிறது.
  • கரையான் மருந்தை ஐந்து பங்கு காய்ந்த மண்ணுடன் கலந்து லேசாக பயன்படுத்தவும்.

வாய்க்கால் வழி

  • தென்னை மரங்களில் இருந்து 5 அடி தள்ளி ஒரு சதுர வரப்பு அமைக்கவும்.
  • அதாவது 10க்கு4 சதுர அடி சதுர வரப்பு அமைத்து, வரப்பின் விளிம்பு வழியாக ஒரு வாய்க்கால் வழியாக அமைத்து, அதன் வழியாக தண்ணீரை ஒரு தென்னைக்கு பாய்ச்சியதும், அடைத்து வாய்க்கால் வழியாக அடுத்து தென்னைக்கு கொண்டு பாய்ச்ச வேண்டும்.
  • இவ்வாறு பாய்ச்சும்போது தண்ணீரை நிறையப்பாய்ச்ச வேண்டும். தண்ணீர் குறைவாக கிடைக்குமானால் 15 நாட்களுக்கு ஒருமுறை பாய்ச்சினால் கூட தென்னை மரங்கள் பாதிக்காது.
  • முதல் நூறு தென்னை மரங்களுக்கு மட்டும் நீர் பாய்ச்ச முடியும் என்றால், அடுத்த நாள் கிடைக்கும் தண்ணீரை வாய்க்கால் வழி கொண்டு சென்று 101வது தென்னைக்கு பாய்ச்ச வேண்டும்.
  • இவ்வாறு தினமும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கிடைக்கும் நீரை முறை வைத்து ஒழுங்குபடுத்தி பாய்ச்சி தென்னை மரங்களை காப்பாற்ற முடியும்.

தொடர்புக்கு 08220459341 .
டாக்டர் வா.செ.செல்வம்
தென்னை ஆராய்ச்சியாளர்
திருவையாறு.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *