மதுரை மாவட்டத்தில் புதுமையாக தேனுார் கட்டப்புலி கிராமத்தில் தென்னந்தோப்பில் மீன்வளர்க்கும் விவசாயி கணேசன் கூறியதாவது:
- அரசின் நுாறுநாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், டி.ஆர்.டி.ஏ., மூலம் நிலத்தில் ஐந்தடி ஆழத்தில் பண்ணை குட்டை அமைத்துத் தந்தனர்.
- ஆனால் அங்கே தண்ணீர் நிற்கவில்லை. ஆனாலும் மீன்வளர்க்கும் எண்ணம் குறையவில்லை.
- நான்கு வரிசை மரங்கள் இருந்தன. அதில் ஒரு வரிசையை முழுவதுமாக வெட்டி விட்டேன். தென்னையைச் சுற்றியுள்ள இடத்தை பள்ளமாக்கினேன்.
- அந்த இடத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால், மீன்வளர்ப்புத் துறை மூலம் 3000 மீன் குஞ்சுகள், அதற்கான உணவை 50 சதவீத மானிய விலையில் வாங்கினேன். கட்லா, ரோகு, மிர்கால், சில்வர், சி.சி., ரகங்களை விட்டேன். இப்போது 400 கிராம் எடையில் மீன்கள் உள்ளன. பண்ணைக்
- குட்டைக்குள் 50 தென்னைகளின் கீற்று, தண்ணீருக்கு மேலே நிழலையும், குளிர்ச்சியையும் தருவதால் மீன்கள் குளுமையை அனுபவிக்கின்றன. இதனால் அவற்றின் வளர்ச்சியும் நன்றாக இருக்கின்றன.
- தென்னையின் வேர் முண்டுகளையும் உண்கின்றன.தண்ணீருக்குள்ளே தென்னை இருப்பதால், காய்கள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
இன்னும் மூன்று மாதத்தில் மீன்கள் அறுவடைக்கு தயாராகி விடும். நெல்லை விட இதில் கூடுதல் லாபம் கிடைக்கும், என்றார்.வேளாண் உதவி இயக்குனரை 09443930379ல் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்