தென்னையில் அதிக மகசூல் பெற வழிகள்

  • தென்னையில் மேல் இலைகள் பசுமையாகவும் அடிஓலைகளில் வெளிர்நிற புள்ளிகள் தோன்றி மஞ்சள் நிறமடைந்து பின்னர் பழுப்பு நிறமாக மாறும். ஓலைகள் கீழ்நோக்கி தொங்க தொடங்கி முதிர்ச்சி அடையாமலேயே உதிர்ந்து விடும். தேங்காய்கள் சிறுத்து எண்ணிக்கை மிகக் குறைந்தும் காணப்படும்.
  • நுண்சத்து பற்றாக்குறையுடைய தென்னை மரங்களின் ஓலைகளில் நடுநரம்பில் இருபக்கங்களள், நுனி ஓலை ஆகியவை மஞ்சள் நிறமாக மாறும். அடிப்பகுதி பச்சையாக இருக்கும். இளங்கன்றுகளில் ஓலை பிரியாமல் இருக்கும். குருத்து ஓலைகள் வளர்ச்சி இல்லாமலும் இருக்கும். பாளையில் இளம்பிஞ்சுகள் காய்ந்து கருகி காணப்படும்.
  • இந்த குறைகள் ஏற்படாமல் தவிர்தென்னை மரம் ஓர் ஆண்டிற்கு 540 கிராம் தழைச்சத்து 260 கிராம் மணிச்சத்து 820 கிராம் சாம்பல்சத்து இவற்றை மண்ணில் இருந்து எடுக்கும்.மண்ணில் இந்த சத்துக்கள் குறைந்தால் மரத்திற்கு தேவையான பேரூட்டச்சத்துக்களில் பற்றாக்குறை ஏற்படும்.
  • தழைச்சத்து குறைந்தால் தென்னங்கன்றில் வளர்ச்சி குறையும். வளர்ந்த மரங்களில் அனைத்து ஓலைகளும் பச்சை நிறம் குறைந்து மஞ்சள் நிறமாக மாறும். நீர்சத்து வறண்டு தேங்காய்கள், அளவும் எண்ணிக்கையும் குறைந்து காலதாமதமாக காய்க்கும்.
  • மணிச்சத்து பற்றாக்குறைகள் தென்னையில் காணப்படுவதில்லை.
  • சாம்பல்சத்து ப்பதற்கு 5 வயதிற்கு மேல் உள்ள தென்னை மரத்திற்கு ஒரு ஆண்டிற்கு ஐம்பது கிலோ மக்கிய தொழுஉரத்துடன் 1.3 கிலோ யூரியா, 2கிலோ சூப்பர் பாஸ்பேட், 2கிலோ பொட்டாஷ் உரங்களை கலந்து கொண்டு இரண்டு சமபாகமாக பிரித்து மண்ஈரப்பதமாக இருக்கும்போது ஆறுமாத காலஇடைவெளியில் வருடத்திற்கு இரண்டு முறையாக வைக்க வேண்டும்.
  • மரத்திலிருந்து ஐந்து அடி தூரத்திலிருந்து வட்டமாக மண்வெட்டியால் குழிதோண்டி மண்வெட்டியால் உரத்தை மண்ணுடன் கலந்து நீர்பாய்ச்ச வேண்டும்.
  • நுண்சத்துப்பற்றாக்குறையை போக்க ஆண்டுதோறும் ஒரு மரத்திற்கு ஒரு கிலோ வீதம் தென்னை நுண்ணூட்ட சத்து உரத்தினை மரத்தின் மத்தளப் பகுதியினை சுற்றி வேர் பகுதியில் .
  • இட்டு கொத்திவிட்டு மண்ணுடன் கலந்து பின் நீர் கட்டவேண்டும்.
  • மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தென்னை ஊட்டச்சத்து கரைசலை மரத்திற்கு 200 மி.லி. வீதம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை வேர்மூலம் செலுத்த வேண்டும்.

தகவல் : வேளாண்மை துணை இயக்குநர், உழவர்பயிற்சி நிலையம், குடுமியான்மலை.

நன்றி: M.S சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *