தென்னையில் ஊடுபயிர் கோகோ: லாபம் அமோகம்

தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியிலும் குறைந்த நீரை சொட்டு நீர் பாசன முறையில் பயன்படுத்தி தென்னையின் ஊடுபயிராக ‘கொக்கோ‘ பயிரிட்டு மதுரை மாவட்டம் பரவையை சேர்ந்த பெண் விவசாயி சொர்ணவள்ளி சாதனை படைத்து வருகிறார்.

சாக்லேட் தயாரிக்க மூலப்பொருளாக பயன்படும் கொக்கோ பயிர் காபி செடிகள் போல் தோற்றம் கொண்டது. மிதமான வெப்பத்தில் வளரும். தென்னையில் ஊடுபயிராக கொக்கோ பயிரிட தோட்டக்கலைத்துறையினர் பரிந்துரை செய்கின்றனர். மானியமும் உண்டு.

பத்து அடி இடைவெளியில் கொக்கோ செடிகளை நடவு செய்து வளர்ப்பது காய்ப்புக்கு ஏற்றதாக அமையும். விளைச்சல், விலை அமோகம்

Courtesy: Dinamalar

விவசாயி சொர்ணவள்ளி கூறியதாவது:

  • இரண்டு ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது. ஊடுபயிராக எட்டு ஆண்டுகளுக்கு முன் கொக்கோ பயிரிட்டேன்.
  • மூன்றாவது ஆண்டில் இருந்து காய்ப்புக்கு வந்து விட்டது. தேங்காய் போல் காய்கள் பருத்து இருக்கும். காய் பழமான பின் உள்ளே இருக்கும் வழுவழுப்பான விதைகளை வெயிலில் காய வைத்து தோல் நீக்கி நன்கு காய்ந்த பருப்பை மட்டும் எடைக்கு போடுகிறோம்.
  • கோடையில் காய்கள் காய்த்து குலுங்குகின்றன. கொக்கோ ஏற்றுமதியாளர்கள் தோட்டத்துக்கே வந்து கிலோ 250 ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர். ஒரு முறை காய்கள் பறித்தால் 10 கிலோ பருப்பு கிடைக்கிறது. வாரம் தோறும் காய்கள் பறிக்கிறேன். அவ்வப்போது எரு குப்பையை உரமாக இட்டு வருகிறேன். பராமரிப்பு செலவு குறைவு.
  • சாக்லேட் தயாரிப்பின் மூலப்பொருளான கொக்கோ மதுரையில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பயிரிட்டுள்ளனர். ஏற்றுமதி தரம் வாய்ந்த பருப்பு கிலோ 2500 ரூபாய் வரை போகிறது. நேரடியாக ஏற்றுமதி செய்ய தெரியாததால் புரோக்கர்களிடம் குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளது.
  • தோட்டக்கலைத்துறையினர் ஏற்றுமதிக்கு உதவ வேண்டும் என்றார். கொக்கோ விவசாயம் குறித்து தெரிந்து கொள்ள தோட்டக்கலைத்துறை வட்டார உதவி இயக்குனரை அணுகலாம்

.- கா.சுப்பிரமணியன், மதுரை.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *