தென்னையில் கோகோ ஊடு பயிர் பயன்கள்

  •  தென்னந்தோப்புகளில் ” கோகோ‘ சாகுபடி செய்தால், தென்னை விளைச்சல் அதிகரிக்கிறது என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
  • கோவை மாவட்டத்தில் ” கோகோ’ பயிரிடுவதற்கான தட்பவெப்ப நிலை, மண் வளம் மற்றும் நீர்வளம் ஏற்றதாக உள்ளது.
  • தென்னையில் ” கோகோ’ ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம், தென்னை விளைச்சல் அதிகரிக்கிறது. ஆண்டுக்கு 800 கிலோ இலைகள் உதிர்வதால், மண்ணில் அங்கக சத்து உயர்கிறது.
  • சிறந்த முறையில் களை கட்டுப்பாடு செய்யப்படுகிறது. மண் அரிமானமும், மண்ணின் ஈரப்பதமும் காக்கப்படுகிறது.
  • ஒரு ஏக்கரில் “கோகோ’ பயிரிடுவதற்கு 200 முதல் 220 நாற்றுகள் தேவைப்படும்.
  • நல்ல முறையில் பராமரிப்பு செய்தால், ஆண்டுக்கு மரம் ஒன்றில் இருந்து இரண்டு கிலோ உலர் விதைகள் கிடைக்கும்.
  • ஆண்டு விளைச்சல் 400 கிலோ உயர்வதோடு, ஆண்டு வருமானம் 28 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். இதில் செலவு போக நிகர லாபம் 20 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கும்.

இவ்வாறு   கிணத்துக்கடவு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் முகமது இக்பால் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *