தென்னையில் நீர் பாசன மேலாண்மை

நீர் மேலாண்மை

ஐந்தாம் ஆண்டு முதல் தென்னங்கன்றுகளுக்கு நீர் ஆவியாதலுக்கேற்ப கீழ்க்காணும் நீர் மேலாண்மை திட்டத்தை சொட்டு நீர்ப்பாசனம்  அல்லது வட்டப்பாத்தி மூலம் கடைப்பிடிக்கலாம்.

தமிழகத்தின் மேற்குப் பகுதியில் தென்னை மரங்களுக்குத் தேவையான ஒரு  நாளைய நீரின் அளவு (லிட்டரில்).

மாதங்கள் நீர்நிறைந்த பகுதிகள் நீர் ஓரளவு கிடைக்கப் பெறும் பகுதிகள் வறட்சியான பகுதிகள்
அ. சொட்டு நீர்ப்பாசனம்
பிப்ரவரி – மே 65 45 22
ஜனவரி, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் 55 35 18
ஜுன் மற்றும் ஜுலை, அக்டோபர் முதல் டிசம்பர் வரை 45 30 15
ஆ. வட்டப்பாத்தி நீர்ப்பாசனம்
பிப்ரவரி – மே 410 லிட்டர் / 6 நாள் *
ஜனவரி, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் 410 லிட்டர் / 7 நாள் *
ஜுன் மற்றும் ஜுலை, அக்டோபர் – டிசம்பர் 410 லிட்டர் / 9 நாள் *

தமிழகத்தின் கிழக்குப்பகுதியில் அக்டோபர் தென்னை மரங்குளுக்குத் தேவையான ஒரு நாளைய நீரின் அளவு (லிட்டரில்)

மாதங்கள் நீர் நிறைந்த பகுதிகள் நீர் ஓரளவு கிடைக்கப் பெறும் பகுதிகள் வறட்சியான பகுதிகள்
அ. சொட்டு நீர்ப்பாசனம்
மார்ச்சு – செப்டம்பர் 80 55 27
அக்டோபர் – பிப்ரவரி 50 35 18
ஆ. வட்டப்பாத்தி நீர்ப்பாசன முறை
மார்ச் – செப்டம்ப ர் 410 லிட்டர் / 5 நாள்
அக்டோபர் – பிப்ரவரி 410 லிட்டர் / 8 நாள்
  • வட்டப்பாத்திகளில் நீர் பாய்ச்சும்பொது மேலே கொடுக்கப்பட்ட நீரின் அளவுடன் 35 முதல் 40 சதவிகிதம் (135 – 160 லிட்டர்) அதகப்படுத்தி வாய்க்கால்களில் பாய்ச்சும்போது குறையும் நீரின் அளவை ஈடுகட்டவேண்டும்.
  • தென்னை நார்க்கழிவால் நிரப்பப்பட்ட ஒரு அடி நீள, அகல, ஆழ குழிகள் அமைத்து குழிக்குள் 16 மி.மீ விட்டமுடைய பி.வி.சி குழாய்களை சாய்வாக வைத்து அதில் சொட்டு நீர் விழும்படி அமைக்கவேண்டும். இக்குழிகள் மரத்திலிருந்து 1 மிட்டர் தூரத்தில் நான்கு பக்கமும் அமைக்கப்படவேண்டும்.
  • முதலாம் ஆண்டு  ஒரு நாள் விட்டு ஒரு நாளும், இரண்டாம் ஆண்டு முதல் காய் விடிக்கும் வரை வாரம் இருமுறையும் தேவைக்கேற்ப பாய்ச்சதல் சிறந்தது.

சொட்டு நீர் பாசனம்

தென்னையின் வேரானது மரத்தின் அடிப்பகுதியிலிருந்து 200 செ.மீ. ஆழம் வரையும் 100 செ.மீ. ஆழம் வரையும் சென்று தண்ணீரை உறிஞ்சக் கூடியது. சொட்டு நிர்ப்பாசனம் மூலம் நீர் பாய்ச்சுவதற்கு மரத்தின் அடிப்பகுதயில் இருந்து 100 செ.மீ. ஆழத்தில் நாலு நீர் சொட்டிகளை சமமான இடைவெளியில் பொறுத்தி, ஒரு மணி நேரத்திற்கு 30 லி. என்ற அளவில் 2.5 மணி நேரம் நீர் பாய்ச்ச வேண்டும். 8 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு நீர்பாய்ச்ச வேண்டும்.

நன்றி:தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *