தென்னை சாகுபடி இயந்திரங்கள் – I

சிறப்புப் பண்புகள்: தென்னை மரங்களில் காய்களைப் பறிக்கவும், சுத்தம் செய்வதற்காகவும், மரங்களில் தாவி ஏறுவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும. இக்கருவியைப் பயன்படுத்தி மரம் ஏறிப் பழக்கமில்லாதவர்கள், பெண்களும் கூட எளிதில் தென்னை மரத்தில் ஏற முடியும். 30-40 அடி உயரமுள்ள ஒரு மரத்தில் ஏற 1.5 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

ஒரு கருவியின் விலை: ரூ. 2,000/-
கொள்ளளவு: 50-60 மரங்கள்/நாளொன்றுக்கு
தயாரிப்பாளர் : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்,  கோயம்புத்தூர்

 

கேரள வேளாண் பல்கலைக்கழகமானது எளிதில் நல்ல திறனுடன் தென்னை மட்டை உரிக்க ஒரு கருவியை உருவாக்கி உள்ளது.  தேங்காயின் முதிர்ச்சியையும்,  அதன் விதத்தையும் பொறுத்து 8-12 நொடிகளில் ஒரு தேங்காயின் மட்டையினை உரித்துவிடலாம்.  குறைவான எடை கொண்ட இதனைக் கையாளுவது எளிது.  கைக்கடக்கமான இதனை வீட்டிலும் மற்றும் வெளியில் எடுத்துச் சென்றும் பயன்படுத்தலாம்.

பயன்பாடு :   வேளாண் கழிவுகளை எரித்து சூடான காற்றை உற்பத்தி செய்தல்
சிறப்பியல்புகள் :
அ) மொத்த: 3100 x 890 x 200 மி.மீ
ஆ) கொள்ளளவு: 1 டன்/நாளொன்றுக்கு
இ) ஆற்றல் தேவை: 2 (hp)  குதிரைத் திறன் மின்சார மோட்டார்.

பொதுவான தகவல்: இவ்வியந்திரம் தானியங்களைப் போடுவதற்கென செவ்வக வடிவ, உலோகத்தாலான கொப்பரை, காற்று ஊதுவான், வேளாண் கழிவுகளை எரிபொருளாக பயன்படுத்தும் அடுப்பு போன்ற அமைப்புகளைக் கொண்டுள்ளது.  சுற்றிலுமுள்ள காற்றைக் கலந்து 80 ºC வரை சூடான வாயுவை உற்பத்தி செய்யக்கூடியது.  இதற்குத் தேவையான காற்றளவைச் சரிசெய்து கொள்ள பட்டாம்பூச்சி போன்ற வால்வு அமைக்கப்பட்டுள்ளது.  ஒரு வளையும் தன்மை கொண்ட குழாய் வழியே இச்சூடான காற்று கொப்பரைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.

கருவியின் விலை : ரூ. 1,00,000/-
பயன்படுத்த ஆகும் செலவு: ரூ.20/மணிக்கு
தயாரிப்பாளர் : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்,  கோயம்புத்தூர்

செயல்பாடு/பயன்பாடு : மரக்கன்றுகளை நட குழி தோண்ட, பயன்படுகிறது.
பண்புகள்:

வகை: சுழலும் திருகாணி ஆகர் வகையைச் சார்ந்தது.
ஆற்றல் தேவை : 8-10 குதிரைத் திறன் (hp) பவர் டில்லர்.
மொத்த அளவுகள்: 400 x 635 x 1635 மி.மீ
எடை: 50 கி.கி
கொள்ளளவு: 25 முதல் 30 குழிகள்/மணிக்கு

பொதுவான தகவல்: 225 மி.மீ விட்டம் கொண்ட வட்ட வடிவ ஆகர் கருவியானது 100 மி.மீ இடைவெளியுடன் இறக்கை அல்லது அலமாரி போன்ற அமைப்பினால் இயக்கப்படுகின்றது.  ஆகரின் வட்டவடிவ இயக்கமானது, பட்டைக்கம்பி மற்றும் சாய்வுப் பல்சக்கரத்தினால் நடைபெறுகிறது.  இக்கம்பி மற்றும் சாய்வுப் பல்சக்கரம் பவர் டில்லரின் என்ஜின் கம்பியுன் 1:1 என்ற விகிதத்தில் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.  இந்த அமைப்பு முழுவதும் செவ்வக வடிவ தளத்தில் நன்கு இணைத்து நிறுவப்பட்டுள்ளது.  இதன் ஒரு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள கைச்சக்கரத்தின் மூலம் துளையிடும் ஆழத்தை மாற்றிக் கொள்ளலாம்.  பெரிய அளவிலான ஓட்டைகள் இட வேண்டுமாயின் 250, 275 மற்றும் 300 மி.மீ அளவு விட்டமுள்ள ஆகரின் இயந்திரத்தில் மாற்றிப் பொருத்திக் கொள்ளலாம்.    பின்பகுதியில் சமநிலைக்கு தரப்பட்டுள்ள நெம்பு தாங்கி, அதேபோல் முன் பகுதியில் தரப்பட்டுள்ள தாங்கும் சக்கரம் போன்றவை ஆகர் துளையிடும்போது அதை நன்கு சுழலச் செய்வதோடு, கடின இயக்கத் தன்மையைக் குறைக்கவும், இயந்திரத்தை எளிதாகக் கையாள்வதிலும் உதவி புரிகின்றன.

விலை : ரூ. 20,000/-
தயாரிப்பாளர் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *