தென்னை மரத்தின் பாளையை காண்டாமிருக வண்டுகளும், தண்டுப் பகுதியை சிகப்பு கூன் வண்டுகளும் சேதப்படுத்தி மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது.
- காண்டாமிருக வண்டு தாக்கப்பட்ட தென்னை இலைகள் முக்கோண வடிவில் வெட்டியது போல் காணப்படும்.
- துளைக்கப்பட்ட தண்டுப் பகுதியின் துவாரத்திலிருந்து, மரச்சக்கைகள் வெளியே தள்ளப்பட்டிருக்கும்.
- இவ்வண்டுகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த, எருக்குழியில் கார்பரில் தூள் இரண்டு கிராமில் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தெளித்தால் முட்டை மற்றும் கூட்டுப் புழுக்கள் அழியும்.
- வேப்பங்கொட்டைத்தூளுடன் மணல் சமபங்கு கலந்து குருத்துப் பகுதியின் மேல் மூன்று மட்டை இடுக்குகளில் மரத்திற்கு 150 கிராம் இடுவதன் மூலமும், அந்து உருண்டைகளை மட்டைக்கு ஒன்று வீதம் வைப்பதன் மூலமும் அழிக்க முடியும்.
- ஒரு பாளையில் ஆமணக்கு, கொட்டைமுத்து புண்ணாக்கு ஒரு கிலோ இட்டு முக்கால் பாகம் தண்ணீர் நிரப்பி மூன்று நாட்கள் ஊறவைத்து தெளிக்க வேண்டும்.
- மெட்டாரைசியம் என்னும் பூஞ்சாளத்தை உபயோகித்தும் வண்டுகளைக் கட்டுப்படுத்தலாம்
இவ்வாறு இவ்வண்டுகளால் ஏற்படும் சேதங்களை கட்டுப்படுத்துவது குறித்து விநாயகபுரம் வேளாண்மை துணை இயக்குனர் காதிரி தெரிவித்து உள்ளார்.
நன்றி: தினமலர்
தென்னை பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
One thought on “தென்னை மரத்தை தாக்கும் காண்டாமிருக வண்டு”